• Login
Thursday, March 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

மேற்கு ஆசியப் போர் பதற்றம்: பிரான்ஸ் அதிபருடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி!

GenevaTimes by GenevaTimes
March 5, 2026
in உலகம்
Reading Time: 1 min read
0
மேற்கு ஆசியப் போர் பதற்றம்: பிரான்ஸ் அதிபருடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மேற்கு ஆசியாவில் போர்ச் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார். இந்த உரையாடலின் போது, பிராந்தியத்தில் நிலவும் தற்போதைய நிலை குறித்து இரு தலைவர்களும் தங்கள் ஆழ்ந்த கவலையைப் பகிர்ந்து கொண்டனர்.

இது குறித்து பிரதமர் மோடி தனது ‘எக்ஸ்’ பக்கத்தில், “எனது நண்பர் அதிபர் மேக்ரானுடன் இன்று பேசினேன். மேற்கு ஆசியாவின் தற்போதைய சூழல் குறித்து எங்களின் கவலைகளைப் பகிர்ந்து கொண்டோம். மீண்டும் பேச்சுவார்த்தை மற்றும் தூதரக ரீதியிலான தீர்வுகளுக்குத் திரும்ப வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினோம். இப்பிராந்தியத்தில் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் மீட்டெடுக்கத் தொடர்ந்து இணைந்து செயல்படுவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

இதற்கிடையில், போர் தீவிரமடைவது, இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகள் குறித்து மத்திய அரசு கவலை தெரிவித்துள்ளது. குறிப்பாக, எரிசக்தி விநியோகத்தில் ஏற்பட வாய்ப்புள்ள தட்டுப்பாடுகள் மற்றும் அதன் விளைவுகள் குறித்து மத்திய அரசு உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. மோதல்களை முடிவுக்குக் கொண்டுவர ‘பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரம்’ மட்டுமே வழி என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் வசித்து வருகின்றனர். அவர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி, அங்குள்ள நாடுகள் மற்றும் முக்கிய சர்வதேச நாடுகளுடன் இந்தியா தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறது. இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையில் மேற்கு ஆசியாவிற்கு முக்கியப் பங்கு இருப்பதால், தற்போதைய நிலவரம் மிகுந்த கவலையை அளிப்பதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

இது குறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மேற்கு ஆசியாவின் நிலையை இந்தியா மிக நெருக்கமாகக் கண்காணித்து வருகிறது. நாட்டின் பாதுகாப்பையும், தேசிய நலனையும் கருத்தில் கொண்டு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உரிய நேரத்தில் இந்திய அரசு மேற்கொள்ளும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trump: ‘ரொம்பக் கெடுபிடியானவர்; போரை நாங்கள் தொடர்வோம் என்றார்’- மோடி குறித்து டிரம்ப் பேச்சு

Read More

Previous Post

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக பதவியை ராஜினாமா செய்த ஆளுநர்! மேற்குவங்கத்திற்கு செல்லும் ஆளுநர் ஆர்.என். ரவி | India News (இந்தியா செய்திகள்)

Next Post

ரஜினிகாந்தின் ஓட்டல் வாடகை கட்டிட விவகாரம்: தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு | Makkal Osai

Next Post

ரஜினிகாந்தின் ஓட்டல் வாடகை கட்டிட விவகாரம்: தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin