Last Updated:
ஆணுறை உற்பத்தி பாதிக்கப்படுவது மட்டுமின்றி, விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேற்கு ஆசியப் போரால் எண்ணெய் மற்றும் எரிவாயுவைத் தொடர்ந்து, ஆணுறைத் தட்டுப்பாடு இந்தியாவில் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கருத்தடை சாதனமான ஆணுறை தயாரிப்பில் சிலிக்கான் எண்ணெய் மற்றும் அமோனியா முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் அம்மோனியாவை 86 சதவிகிதம் சவுதி அரேபியா, கத்தார் மற்றும் ஓமன் போன்ற நாடுகளில் இருந்து இந்தியா இறக்குமதி செய்து வருகிறது. தற்போது போர் காரணமாக, மூலப்பொருட்களின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனால், HLL Lifecare, Mankind Pharma மற்றும் Cupid Ltd போன்ற அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ‘சிலிக்கான் ஆயில்’ கிடைப்பதில் சிக்கலையும், ‘அம்மோனியா’ விலை உயர்வையும் சந்தித்து வருகின்றன. குறிப்பாக, அம்மோனியா விலை 40 முதல் 50 சதவிகிதம் வரை உயரக்கூடும் என்றும் சிலிக்கான் ஆயில் விலையும் மிகக் கடுமையாக உயர்ந்து வருவதாகவும் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இதனால் ஆணுறை உற்பத்தி பாதிக்கப்படுவது மட்டுமின்றி, விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆணுறைகள் கிடைக்கவில்லை எனில் தேவையற்ற கருத்தரிப்புகள் மற்றும் பால்வினை நோய்கள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.


