Last Updated:
மேற்காசியப் போர் பதற்றத்தில், டெல்லியில் இன்று இரவு 7 மணிக்கு பாதுகாப்பு துறைக்கான மத்திய அமைச்சரவை 3வது கூட்டம், நரேந்திர மோடி முன்னிலையில் நடைபெறுகிறது
மேற்காசியப் போர் தொடர்பாக பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் இரவு 7 மணிக்கு கூடுகிறது.
கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி முதல் இஸ்ரேல், ஈரான் அமெரிக்கா படைகள் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில் மேற்காசிய நாடுகளில் போர் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் உலக அளவில் பொருளாதார சரிவுகள் மற்றும் எரிசக்தி பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் உலகின் பல நாடுகளும் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று மாலை டெல்லியில் பாதுகாப்பு துறைக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. இன்று மாலை 7 மணிக்கு பாதுகாப்பு துறைக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என்றும், மேற்காசியப்போர் பதற்றங்களுக்கு மத்தியில் ஏற்கனவே இரண்டு முறை பாதுகாப்பு துறைக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றுள்ள நிலையில் இன்று 3-வது முறையாக பாதுகாப்பு துறைக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் கூடுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே மேற்காசிய போர் ஏற்பட்ட பிறகு முப்படைகளின் தலைமை தளபதி மற்றும் முப்படைகளின் தளபதிகள், மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் & வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்டோரோடு பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு கட்டங்களாக ஆலோசனை கூட்டங்கள் நடத்தி இருந்த நிலையில் இன்று பாதுகாப்பு துறைக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் கூடுவது குறிப்பிடத்தக்கது.
Delhi,Delhi,Delhi


