Last Updated:
இந்தியாவும் பிரான்சும் போர் பதற்றத்தை தணிக்க நடவடிக்கை எடுக்கும் என பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் தொலைபேசியில் உரையாடினார்.
இந்தியாவும், பிரான்சும் இணைந்து போர் பதற்றத்தை தணிக்க நடவடிக்கை எடுக்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஈரான் மீது அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் இணைந்து நடத்திய தாக்குதலால் மேற்காசியாவில் போர் பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில், மேற்காசியாவில் நிலவும் அசாதாரண சூழல் குறித்து பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடினார்.
இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், பேச்சுவார்த்தை மூலம் போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து ஆலோசித்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனிடையே, ஈரான் உச்ச தலைவர் கமேனி மறைவுக்கு இந்தியா தரப்பில் வெளியுறவுத்துறைச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும் கமேனி கொல்லப்பட்டது குறித்து இந்தியா இதுவரை கருத்து தெரிவிக்காமல் இருந்த நிலையில், ஈரான் தூதரகத்தில் உள்ள இரங்கல் புத்தகத்தில் விக்ரம் மிஸ்ரி இந்தியா தரப்பில் இரங்கலை பதிவு செய்தார்.


