Last Updated:
மைசூரைச் சேர்ந்த ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநரான மகேஷ் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து சர்வ தர்ம ஆசிரம பகுதிக்கு அருகிலுள்ள கிருஷ்ணராஜ சாகர் பகுதியில் தனது நண்பர்களுடன் சேர்ந்து பிக்னிக் சென்றுள்ளார்.
கர்நாடகாவில் காவிரி ஆற்றின் மேல் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தின் மீது நின்று புகைப்படம் எடுக்க முயற்சித்த நபர் ஒருவர் தவறி விழுந்து ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிடைத்துள்ள தகவலின்படி 36 வயது நிரம்பிய மகேஷ் என்ற நபர், இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். மைசூரைச் சேர்ந்த ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநரான மகேஷ் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து சர்வ தர்ம ஆசிரம பகுதிக்கு அருகிலுள்ள கிருஷ்ணராஜ சாகர் பகுதியில் தனது நண்பர்களுடன் சேர்ந்து பிக்னிக் சென்றுள்ளார்.
நண்பர்களுடன் சேர்ந்து குதூகலமாக அரட்டையடித்துக் கொண்டிருந்த மகேஷ், அதே மனநிலையில் காவிரி ஆற்றின் மேல் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தின் மீது ஏறி நின்று புகைப்படம் எடுத்துக்கொள்ள முயற்சி செய்துள்ளார். புகைப்படம் எடுக்க முயன்று கொண்டிருக்கும்போதே நிலைதடுமாறி பாலத்தில் இருந்து தவறி ஆற்றில் விழுந்துள்ளார்.
ஆற்றுத் தண்ணீரின் அளவு அதிகமாக இருந்ததாலும், நீரோட்டத்தின் வேகம் அதிகமாக இருந்ததாலும் விழுந்ததுமே ஆற்றின் நீரோட்டத்தில் அவர் மிகவும் விரைவாக அடித்துச் செல்லப்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து தேடுதல் வேட்டையை துவங்கியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புகைப்படம் எடுக்க வந்த ஒருவர், ஆற்றில் தவறி விழுந்து உயிரை விடுவது இது முதல்முறை அல்ல. சமூக ஊடகங்களில் லைக்குகளைப் பெறுவதற்காக ஆர்வ மிகுதியில் பலரும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். சுற்றுலாவுக்கு வரும் மக்கள் இதுபோன்ற உயிருக்கு ஆபத்தான தேவையற்ற சாகசங்களில் ஈடுபட வேண்டாம் என காவலர்கள் பலமுறை அறிவுறுத்தியும், மக்கள் யாரும் இதனைப் பொருட்படுத்துவதாக இல்லை.
காவல்துறையினரின் அறிக்கையின்படி, பிற்பகல் 2.30 மணிக்கு இந்த கோர விபத்து நடைபெற்றுள்ளது. கோப்பா காவல் நிலையக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் உள்ள விஸ்வேஸ்வரய்யா கால்வாய் மேம்பாலத்தில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. மேம்பாலத்தை கடக்கும் முயற்சியில் அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் சாலைத் தடுப்புகளில் மோதி, பாலத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு, நேராக கால்வாயில் விழுந்துள்ளனர். கால்வாயில் தூக்கி வீசப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
July 11, 2025 4:54 PM IST
மேம்பாலத்தின் மீது புகைப்படம் எடுக்க முயன்றபோது நடந்த விபரீதம்… சுற்றுலா சென்றபோது ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட நபர்…


