Last Updated:
மேட்டூர் அணையில் இருந்து சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், 120 நாள் பயிருக்கு 45 நாட்கள் மட்டுமே தண்ணீர் போதுமா என தஞ்சாவூர் விவசாயிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து இன்று முதலமைச்சர் விஜய் தண்ணீரை திறந்து வைத்துள்ள நிலையில், அணையில் குறைந்தபட்சம் 100 டி.எம்.சி. நீர் இருப்பு இருந்தால் மட்டுமே தண்ணீரை திறக்க வேண்டும் என்றும், இல்லையெனில் பாசனப் பகுதிகளுக்கு போதிய அளவு தண்ணீர் சென்றடையாது என்றும் தஞ்சாவூர் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

