• Login
Monday, April 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

மேட்ச் தொடங்கும் முன்னரே குஜராத் அணிக்கு ஏற்படப்போகும் நெருக்கடி.. மொத்த மைதானமும் மஞ்சளாக காட்சியளிக்க வாய்ப்பு..

GenevaTimes by GenevaTimes
May 25, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
மேட்ச் தொடங்கும் முன்னரே குஜராத் அணிக்கு ஏற்படப்போகும் நெருக்கடி.. மொத்த மைதானமும் மஞ்சளாக காட்சியளிக்க வாய்ப்பு..
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 25, 2025 3:04 PM IST

இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் குஜராத் அணி ஐபிஎல் தரவரிசையில் டாப் 2 இடங்களில் தனது ஆட்டத்தை நிறைவு செய்யும்.

தோனிதோனி
தோனி

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு போட்டி தொடங்கும் முன்னரே தோனியால் நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்றைய போட்டி அவரது ஐபிஎல் தொடரில் கடைசி ஆட்டமாக இருக்கும் என்று தகவல்கள் பரவி உள்ள நிலையில், ஒட்டுமொத்த அகமதாபாத் மைதானமும் மஞ்சள் ஜெர்சி அணிந்த ரசிகர்களால் காட்சியளிக்கும் என்பதால் அது மனதளவில் குஜராத் அணிக்கு நெருக்கடியை கொடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

43 வயதாகும் மகேந்திர சிங் தோனி ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தற்போது சென்னை அணியின் கேப்டனாக பொறுப்பில் உள்ளார். இந்த சீசன் சென்னை அணிக்கு மிகவும் சுமாரானதாகவே அமைந்தது. இதுவரை 13 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று 6 புள்ளிகள் உடன் கடைசி இடமான பத்தாவது இடத்தில் இருக்கிறது.

இந்த நிலையில் லீக் போட்டிகளின் கடைசி மேட்ச்சாக சென்னை அணி இன்று குஜராத் டைட்டன்ஸ் அணியை அதன் சொந்த மைதானமான அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று எதிர்கொள்கிறது. இதற்கிடையே இன்றைய ஆட்டத்துடன் தோனி ஐ.பி. எல் தொடரிலிருந்து விடை பெறுவார் என்று இன்று காலை முதல் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியுள்ளன.

ஆனால் ஓய்வு குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகத்திடம் தோனி எந்த தகவலும் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தோனியின் கடைசி மேட்ச் இன்றைய ஆட்டம் தான் என்று கூறியுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரரும் விமர்சகருமான முகமது கைஃப், ரசிகர்கள் இன்று மஞ்சள் நிற ஜெர்சி அணிந்து வந்து தோனிக்கு அன்பை வெளிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

அதனால் குஜராத் அணியின் ரசிகர்களாக இருந்தாலும் இன்றைக்கு அவர்கள் மஞ்சள் ஜெர்சியில் விளையாட்டை காண்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. அந்த வகையில் போட்டி நடைபெறும் அகமதாபாத் மைதானம் மஞ்சள் வண்ணத்தால் நிறைந்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது மனதளவில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தலாம். இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் குஜராத் அணி ஐபிஎல் தரவரிசையில் டாப் 2 இடங்களில் தனது ஆட்டத்தை நிறைவு செய்யும். இதன் மூலம் அந்த அணிக்கு இறுதிப்போட்டியில் விளையாடுவதற்கு பிளே ஆப் சுற்றின் போது 2 வாய்ப்புகள் கிடைக்கும் என்பது கவனிக்கத்தக்கது.

தமிழ் செய்திகள்/விளையாட்டு/IPL/

மேட்ச் தொடங்கும் முன்னரே குஜராத் அணிக்கு ஏற்படப்போகும் நெருக்கடி.. மொத்த மைதானமும் மஞ்சளாக காட்சியளிக்க வாய்ப்பு..

Read More

Previous Post

கொரோனா தொற்று..! கர்நாடகாவில் முதல் உயிரிழப்பு – இந்தியாவில் மொத்தம் 5 பேர் பலி

Next Post

வோடஃபோன் ப்ரீபெய்டு கஸ்டமர்களுக்கு ஹாப்பி நியூஸ்…! புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ள Vi நிறுவனம்…

Next Post
வோடஃபோன் ப்ரீபெய்டு கஸ்டமர்களுக்கு ஹாப்பி நியூஸ்…! புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ள Vi நிறுவனம்…

வோடஃபோன் ப்ரீபெய்டு கஸ்டமர்களுக்கு ஹாப்பி நியூஸ்...! புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ள Vi நிறுவனம்...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin