• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

மேக்ஸ்வெல் அதிரடியால் டி20 தொடரை வென்றது ஆஸ்திரேலிய அணி! | maxwell show helps australia to win t20 series versus south africa

GenevaTimes by GenevaTimes
August 17, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
மேக்ஸ்வெல் அதிரடியால் டி20 தொடரை வென்றது ஆஸ்திரேலிய அணி! | maxwell show helps australia to win t20 series versus south africa
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கெய்ன்ஸ்: மேக்ஸ்வெல்லின் அதிரடியால் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி தொடரை 2-1 என கைப்பற்றி கோப்பையை வென்றது.

ஆஸ்திரேலியாவின் கெய்ன்ஸ் நகரில் உள்ள கசாலிஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 172 ரன்கள் குவித்தது. இளம் அதிரடி பேட்ஸ்மேனான டெவால்ட் பிரேவிஸ் 26 பந் துகளில் 6 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 53 ரன்கள் விளாசினார்.

ஆரோன் ஹார்டி வீசிய 10-வது ஓவரில் மிட்விக்கெட், லாங்க் ஆன், லாங்க் ஆஃப், டீப் கவர் ஆகிய திசைகளில் சிக்ஸர் விளாசி மிரட்டினார் டெவால்ட் பிரேவிஸ். இந்த ஓவரில் மட்டும் 27 ரன்கள் விளாசப்பட்டிருந்தன.

லுவான்​-ட்ரே பிரிட்​டோரியஸ் 15 பந்​துகளில், 5 பவுண்​டரி​களுடன் 24 ரன்​களும், டிரிஸ்​டன் ஸ்டப்ஸ் 23 பந்​துகளில், 2 பவுண்​டரி​களு​டன் 25 ரன்​களும், ராஸி வான் டெர் டஸ்​ஸன் 26 பந்​துகளில், 3 பவுண்​டரி​களு​டன் 38 ரன்​களும் சேர்த்​தனர். தொடக்க வீரர்​களான கேப்​டன் எய்​டன் மார்க் ரம் 1, ரியான் ரிக்​கெல்​டன் 13 ரன்​களில் வெளி​யேறினர்.

ஒரு கட்​டத்​தில் தென் ஆப்​பிரிக்க அணி 11 ஓவர்​களில் 3 விக்​கெட்​கள் இழப்​புக்கு 108 ரன்​கள் குவித்து வலு​வாக இருந்​தது. இதன் பின்​னர் டெவால்ட் பிரே​விஸ் ஆட்​ட​மிழந்​ததை தொடர்ந்து தென் ஆப்​பிரிக்க அணி​யின் ரன்​கு​விப்பை ஆஸ்​திரேலிய பந்து வீச்​சாளர்​கள் வெகு​வாக குறைத்​தனர். கடைசி 9 ஓவர்​களில் தென் ஆப்​பிரிக்க அணி​யால் 64 ரன்​கள் மட்​டுமே எடுக்க முடிந்​தது. 4 விக்​கெட்​களை​யும் பறி​கொடுத்​திருந்​தது.

173 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த ஆஸ்​திரேலிய அணி 19.5 ஓவர்​களில் 8 விக்​கெட்​கள் இழப்​புக்கு 173 ரன்​கள் எடுத்து வெற்றி பெற்​றது. கிளென் மேக்​ஸ்​வெல் 36 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 8 பவுண்​டரி​களு​டன் 62 ரன்​கள் விளாசி அணி​யின் வெற்​றி​யில் முக்​கிய பங்கு வகித்​தார். கேப்​ட​னும், தொடக்க வீரரு​மான மிட்​செல் மார்ஷ் 37 பந்​துகளில், 5 சிக்​ஸர்​கள், 3 பவுண்​டரி​களு​டன் 54 ரன்​கள் சேர்த்​தார்.

டிரா​விஸ் ஹெட் 19, ஜோஷ் இங்​லிஷ் 0, கேமரூன் கிரீன் 9, டிம் டேவிட் 17, ஆரோன் ஹார்டி 1, பென் டுவார்​ஷு​யிஸ் 1, நேதன் எலிஸ் 0 ரன்​களில் நடையை கட்​டினர். லுங்கி நிகிடி வீசிய கடைசி ஓவரில் ஆஸ்​திரேலிய அணி​யின் வெற்​றிக்கு 10 ரன்​கள் தேவை​யாக இருந்​தன. முதல் பந்​தில் 2 ரன்​கள் சேர்த்த கிளென் மேக்​ஸ்​வெல் 2-வது மற்​றும் 5-வது பந்​துகளில் பவுண்​டரி விளாசி அணியை வெற்றி பெற வைத்​தார்.

2 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற ஆஸ்​திரேலிய அணி 3 ஆட்​டங்​கள் கொண்ட டி 20 கிரிக்​கெட் தொடரை 2-1 என கைப்​பற்றி கோப்​பையை வென்​றது. முதல் போட்​டி​யில் அந்த அணி 17 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றிருந்​தது. 2-வது ஆட்​டத்​தில் 53 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி கண்​டிருந்​தது.

ஆட்ட நாயக​னாக கிளென் மேக்​ஸ்​வெல்​லும், தொடர் நாயக​னாக டிம் டேவிட்​டும் தேர்​வா​னார்​கள். டி20 தொடரை தொடர்ந்து இரு அணி​களும் 3 ஆட்​டங்​கள் கொண்ட ஒரு​நாள் கிரிக்​கெட் போட்டி தொடரில் மோத உள்​ளன. இதன் முதல் ஆட்​டம் வரும் 19-ம்​ தேதி கசாலிஸ்​ மைதானத்​தில்​ நடைபெறுகிறது.



Read More

Previous Post

ஜம்மு – காஷ்மீரில் மீண்டும் மேகவெடிப்பு: 4 பேர் பலி; 6 பேர் காயம்!

Next Post

Putin: 3 மணி நேர பேச்சுவார்த்தை: புதினின் நிபந்தனையை ஏற்றுக்கொண்ட ட்ரம்ப்! – போர் முடிவுக்கு வருமா?

Next Post
Putin: 3 மணி நேர பேச்சுவார்த்தை: புதினின் நிபந்தனையை ஏற்றுக்கொண்ட ட்ரம்ப்! – போர் முடிவுக்கு வருமா?

Putin: 3 மணி நேர பேச்சுவார்த்தை: புதினின் நிபந்தனையை ஏற்றுக்கொண்ட ட்ரம்ப்! - போர் முடிவுக்கு வருமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin