• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மேகாலயா ஹனிமூன் வழக்கு; ராஜா ரகுவன்ஷி பிரேத பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்

GenevaTimes by GenevaTimes
June 9, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
மேகாலயா ஹனிமூன் வழக்கு; ராஜா ரகுவன்ஷி பிரேத பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:June 09, 2025 6:48 PM IST

ராஜா ரகுவன்ஷி உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில் அதிர்ச்சிகரத் தகவல் வெளியாகியுள்ளது.

News18News18
News18

மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி என்பவருக்கு, சோனம் என்ற பெண்ணுடன் கடந்த மே 11 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இதையடுத்து புதுமணத் தம்பதி மேகாலயாவில் உள்ள சிரபுஞ்சிக்கு ஹனிமூன் சென்றுள்ளனர். அங்கு உற்சாகமாக சுற்றிப்பார்த்தவர்கள் 24 ஆம் தேதி, நோங்கிரியாட் கிராமத்தில் தங்கியிருந்த விடுதியைக் காலி செய்துவிட்டு திரும்பியுள்ளனர்.

இதையடுத்து, இருவரின் செல்போனுக்கும் குடும்பத்தினர் அழைத்தபோது, தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்றதாக தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அவர்களைத் தொடர்புகொள்ள முடியாமல் போனதால் 8 நாட்களுக்குப் பின் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.

புகாரின்பேரில் புதுமணத் தம்பதியை நோங்கிரியாட் பள்ளத்தாக்கு முழுவதும் போலீசார் வலைவீசித் தேடினர். அப்போது, அவர்கள் தங்கியிருந்த விடுதியில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில், இளைஞர் ஒருவரின் உடல் பாதி அழுகிய நிலையில் கிடந்தது.

30 வயதான அந்த நபரின் கையில் ராஜா என டாட்டூ குத்தப்பட்டிருந்தது. அதன் மூலம் அது புதுமாப்பிள்ளை ராஜா ரகுவன்ஷி என்பதை குடும்பத்தினர் உறுதி செய்தனர். மேலும், உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் பெண் ஒருவரின் வெள்ளை நிற சட்டை, உடைத்துப்போன செல்போன் கவர், மாத்திரைகளும் கிடந்தன.

இதனால் சோனமிற்கு என்ன நடந்தது என்ற கேள்வியோடு போலீசார் விசாரணையைத் தொடர்ந்தனர். இந்த நிலையில், சோனம் ரகுவன்ஷி உத்தர பிரதேசத்தில் உள்ள காசிப்பூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதுகுறித்து டிஜிபி நோங்ராங் கூறுகையில், “சோனம் தான் ஆட்களை வைத்து ராஜா ரகுவன்ஷியைக் கொலை செய்துள்ளார்” எனத் தெரிவித்தார். மேலும் இந்த வழக்கில் உத்தரப்பிரதேசத்தில் ஒருவரும், இந்தூரில் இருவரும் சிறப்புப் புலனாய்வுக் குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்கள் எனத் தெரிவித்தார்.

பாதி அழுகிய நிலையில் கைப்பற்றப்பட்ட ராஜா ரகுவன்ஷி உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில் அதிர்ச்சிகரத் தகவல் வெளியாகியுள்ளது. ராஜா ரகுவன்ஷி தலையின் முன்பக்கமும், பின்பக்கமும் தாக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

First Published :

June 09, 2025 6:26 PM IST

Read More

Previous Post

பொகவந்தலாவையில் ஆறு பேருக்கு சிக்குன்குனியா தொற்று

Next Post

“இந்திய சாலைகள் இன்னும் 2 ஆண்டுகளில் அமெரிக்காவை போல இருக்கும்” – நிதின் கட்கரி | In two more years, Indian roads will be on par with those in the United States: Nitin Gadkari

Next Post
“இந்திய சாலைகள் இன்னும் 2 ஆண்டுகளில் அமெரிக்காவை போல இருக்கும்” – நிதின் கட்கரி | In two more years, Indian roads will be on par with those in the United States: Nitin Gadkari

“இந்திய சாலைகள் இன்னும் 2 ஆண்டுகளில் அமெரிக்காவை போல இருக்கும்” - நிதின் கட்கரி | In two more years, Indian roads will be on par with those in the United States: Nitin Gadkari

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin