Last Updated:
மேகாலயா தாங்ஸ்கு பகுதியில் நிலக்கரி சுரங்க வெடிவிபத்தில் 16 பேர் பலி.
மேகாலயா மாநிலம், கிழக்கு ஜெயிண்டியா ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ளது தாங்ஸ்கு எனும் பகுதி. இங்கு சட்டவிரோதமாக ஒரு நிலக்கரிச் சுரங்கம் இயங்கிவந்துள்ளது. இந்நிலையில், இன்று (5ஆம் தேதி) அந்தச் சுரங்கத்தில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த வெடிவிபத்தில் இதுவரை சுமார் 16 பேர் பலியாகியிருப்பதாக தெரியவந்துள்ளது. மேலும், பலர் அந்தச் சுரங்கத்தில் சிக்கியிருக்கலாம் என சொல்லப்படுகிறது. இந்த விபத்தில் சிக்கிய ஒருவர் மட்டும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நிலக்கரி சுரங்க விபத்து குறித்து அறிந்ததும், சம்பவ இடத்திற்கு மாநில பேரிடர் மீட்புப் படை, காவல்துறை மற்றும் உள்ளூர் நிர்வாகம் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளன.
Profoundly saddened by the tragic coal mine incident in East Jaintia Hills. My deepest sympathies are with the families who have lost their loved ones in this unfortunate tragedy.
The Government of Meghalaya has ordered a comprehensive inquiry into the incident. Accountability…
— Conrad K Sangma (@SangmaConrad) February 5, 2026
இந்தச் சம்பவம் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள மேகாலயா முதலமைச்சர் கான்ராட் சங்மா, “கிழக்கு ஜெயின்டியா மலைகளில் நடந்த துயரமிக்க நிலக்கரிச் சுரங்க விபத்தால் நான் ஆழ்ந்த துயரமடைந்துள்ளேன். இந்த துரதிர்ஷ்டவசமான சோகத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். மேகாலயா அரசு இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.


