• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா கால்பந்து அணி நவம்பர் மாதம் கேரளா வருகை: முழு பின்னணி | Messi Argentina football team to visit Kerala in November full details

GenevaTimes by GenevaTimes
August 24, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா கால்பந்து அணி நவம்பர் மாதம் கேரளா வருகை: முழு பின்னணி | Messi Argentina football team to visit Kerala in November full details
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கொச்சி: நடப்பு உலக சாம்பியனான அர்ஜெண்டினா கால்பந்து அணி வரும் நவம்பர் மாதம் பிஃபாவின் நட்புரீதியிலான போட்டியில் விளையாடுவதற்காக இந்தியாவின் தென் மாநிலமான கேரளாவுக்கு வருகை தருகிறது. இதை அர்ஜெண்டினா கால்பந்து சங்கம் நேற்று உறுதிப்படுத்தியுள்ளது. இந்த போட்டி நவம்பர் 10 – 18ம் தேதிகளுக்கு இடையில் கொச்சி அல்லது திருவனந்தபுரத்தில் நடைபெறக்கூடும்.

அர்ஜெண்டினா கால்பந்து சங்கம் தனது எக்ஸ் வலைதள பதிவில், “லயோனல் ஸ்கலோனியின் பயிற்சியின் கீழ் உள்ள அர்ஜெண்டினா தேசிய அணி இந்த ஆண்டில் எஞ்சியுள்ள 2 பிஃபா நட்புரீதியிலான போட்டிகளில் விளையாடும். இதில் முதல் போட்டி வரும் அக்டோபர் 6 முதல் 14 ம் தேதி வரை, அமெரிக்காவில் நடைபெறும் 2-வது போட்டி நவம்பர் 10 முதல் 18 வரை அங்கோலாவின் லுவாண்டா மற்றும் இந்தியாவின் கேரளாவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரள விளை​யாட்டு அமைச்​சர் அப்​துர்​ரஹ்​மான் கூறும்​போது, “கேப்​டன் லயோனல் மெஸ்ஸி உள்​ளிட்ட உலகக் கோப்​பையை வென்ற அர்​ஜெண்​டினா கால்​பந்து அணியினர் வரும் நவம்​பர் மாதம் கேரளா​வுக்கு வருகை தரு​கின்​றனர்.

வரும் நவம்​பர் மாதம் கேரளா​வில் விளை​யாடும் என்று அர்​ஜெண்​டினா தேசிய கால்​பந்து அணி அறி​வித்​துள்​ளது. லயோனல் மெஸ்ஸி தலை​மை​யில் உலகக் கோப்​பையை வென்ற முழு அணி​யும் கேரளா​வில் விளை​யாடும். இதற்​காக அர்​ஜென்​டினா கால்​பந்து சங்​கத்​துக்கு நாங்​கள் நன்றி தெரி​வித்​துக் கொள்​கிறோம். இது கேரள கால்​பந்து மற்​றும் முழு விளை​யாட்​டுத் துறைக்​கும் உண்​மை​யிலேயே ஒரு வரலாற்று தருணம்” என்​றார்.

இருப்​பினும், அர்​ஜெண்​டினா கால்​பந்து சங்​கத்​தின் எக்ஸ் வலைதள பதி​வில், லயோனல் மெஸ்​ஸியைப் பற்​றியோ அல்​லது தேசிய அணி​யின் விவரங்​களை பற்​றியோ எது​வும் குறிப்​பிடப்​பட​வில்​லை. மேலும் கேரளா​வில் நடை​பெறும் போட்​டி​யில் எதிரணி எது என்​பதும் முடிவு செய்​யப்​பட​வில்​லை. இந்த ஆட்​டம் பிஃ​பா​வின் நட்​புரீ​தியி​லான போட்டி என்​ப​தால் சர்​வ​தேச அணி​யுடனே அர்​ஜெண்​டினா மோதக்​கூடும்.

முன்​ன​தாக, அர்​ஜெண்​டினா அணி​யின் கேரளா மாநில வருகை சந்​தேகத்​திற்​குரிய​தாக இருந்​தது. ஏனெனில் அந்த நாட்​டின் கால்​பந்து சங்​கம் கேரள சுற்​றுப்​பயணத்தை உறு​திப்​படுத்​த​வில்​லை. மேலும் ஒப்​பந்​தத்​தில் கையெழுத்​திடத் தவறியதற்கு கேரள அரசு அதி​காரி​கள் மீது பழி சுமத்​தி​யது அர்​ஜெண்​டினா கால்​பந்து சங்​கம்.

மெஸ்ஸி தலை​மையி​லான அர்​ஜென்​டினா அணியை கேரளா​வுக்கு அழைத்து வரு​வதற்​கான நடவடிக்கை கடந்த ஆண்டு செப்​டம்​பரில் மேற்​கொள்​ளப்​பட்​டது. இதற்​காக கேரள விளை​யாட்​டுத்​துறை அமைச்​சர் அப்​துர்​ரஹ்​மான் ஸ்பெ​யினுக்​குச் சென்று அர்​ஜெண்​டினா கால்​பந்து சங்​கத்​தின் அதி​காரி​களைச் சந்​தித்து ஆலோ​சனை நடத்​தி​னார். இதைத் தொடர்ந்து 2025-ம் ஆண்டு அக்​டோபர் மாதம் அர்​ஜெண்​டினா கால்​பந்து அணி கேரளா வருகை தந்து போட்​டிகளில் விளை​யாடும் என அப்​துர் ரஹ்​மான் தெரி​வித்​திருந்​தார்.

ஆனால், அர்​ஜெண்​டினா கால்​பந்து சங்​கத்​தின் தலைமை வணிக பிரிவு அதி​காரி​யான லியாண்ட்ரோ பீட்​டர்​சன் கடந்த 8-ம் தேதி அன்று உலக சாம்​பியன்​களின் கேரளா வருகை உறு​திப்​படுத்​தப்​பட​வில்லை என்று குறிப்​பிட்​டார். இதனால் அப்​துர் ரஹ்​மான் மீது விமர்​சனங்​கள் எழுந்​தன. ஏனெனில் அப்​துர் ரஹ்​மானின் ஸ்பெ​யின் சுற்​றுப்​பயணத்​துக்​காக ரூ.13 லட்​சம் செல​விடப்​பட்​டிருந்​தது. இந்த சூழ்​நிலை​யில் தற்​போது அர்​ஜெண்​டினா கால்​பந்து அணி​யின் கேரள வருகை உறு​திப்​படுத்​தப்​பட்​டுள்​ளது.

கடைசி​யாக அர்​ஜெண்​டினா அணி கடந்த 2011-ம் ஆண்டு கொல்​கத்​தா​வின் சால்ட் லேக் மைதானத்​தில் வெனிசுலா​வுடன் மோதி​யிருந்​தது. இதில்​ அர்​ஜெண்​டி​னா 1-0 என்​ற கோல்​ கணக்​கில்​ வெற்​றி பெற்​றிருந்​தது.



Read More

Previous Post

ஜம்முவில் புறாவின் காலில் கட்டப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் கடிதம்… உஷார் நிலையில் பாதுகாப்புப் படையினர்…! | இந்தியா

Next Post

ஜோகூரில் நிலநடுக்கத்துக்குப் பிறகும் பெட்ரோனாஸ் எரிவாயு குழாய்கள் பாதுகாப்பாக ஊள்ளன | Makkal Osai

Next Post
ஜோகூரில் நிலநடுக்கத்துக்குப் பிறகும் பெட்ரோனாஸ் எரிவாயு குழாய்கள் பாதுகாப்பாக ஊள்ளன | Makkal Osai

ஜோகூரில் நிலநடுக்கத்துக்குப் பிறகும் பெட்ரோனாஸ் எரிவாயு குழாய்கள் பாதுகாப்பாக ஊள்ளன | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin