டெல்லி மெட்ரோ ரயிலில் சக பயணிகளிடையே இளம்பெண் ஒருவர் ஆபாச நடனம் ஆடிய காட்சிகள், சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்களை குவித்து வருகிறது.
ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் வெறும் லைக்குகளை வாங்குவதற்காக, அண்மை காலங்களில் டெல்லி மெட்ரோ ரயில்களில் பயணிகள் ரீல்ஸ்-க்காக எடுக்கும் வீடியோக்கள் அளவு கடந்து வருகின்றன.
சர்ச்சைக்குரிய வகையில் வீடியோ எடுத்தல், ஆபாச நடனம், பாடுவது முதல் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் சக பயணிகளுக்கு தொல்லை கொடுக்கும் விதமாக பலர் செயல்பட்டு வருகின்றனர். இதைக் கட்டுப்படுத்த மெட்ரோ ரயில் நிர்வாகம் பல்வேறு எச்சரிக்கைகளை கொடுத்த பின்னரும் இதுபோன்ற செயல்கள் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
அண்மையில், கூட்டமில்லாத டெல்லி மெட்ரோ ரயில் பெட்டியில் நுழைந்த இளம்பெண் ஒருவர், சக பயணிகள் முன்னிலையில் ஆபாச நடன அசைவுகளை ஆடி ரீல்ஸ் பதிவு செய்தார். இதனை கவனித்த சக பயணிகள் ஒன்றும் புரியாமல் வேடிக்கை பார்க்கின்றனர். இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்ட இந்த வீடியோவில் பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
Also Read |
இந்தியாவை அதிரவைத்த கிரிமினல்… 2000 குற்றவாளிகளை ரிலீஸ் செய்த போலி நீதிபதி!
ஏற்கெனவே, இதுபோன்ற செயல்களுக்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் தடை விதித்த பிறகும், இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவதாக கமெண்ட் செய்துள்ள ஒருவர், அத்துமீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். அதேபோல், ஆபாசமான இந்த வீடியோவை பதிவிட்ட பெண்ணுக்கு கடும் அபராதம் விதிக்க வேண்டும் என்றும், இதுபோன்ற முட்டாள்தனங்களை நிறுத்த வேண்டும் என்றும், அதற்கு சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் நெட்டிசன்கள் பலர் கேட்டுக் கொண்டனர்.
.
&w=750&resize=750,375&ssl=1)
