• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

மெக்ராத்யிடம் பயிற்சி..! 147 கி.மீ வேகம்..! கிரிக்கெட் உலகை திரும்பி பார்க்க வைக்கும் 17 வயது தமிழர்..!

GenevaTimes by GenevaTimes
June 12, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
மெக்ராத்யிடம் பயிற்சி..! 147 கி.மீ வேகம்..! கிரிக்கெட் உலகை திரும்பி பார்க்க வைக்கும் 17 வயது தமிழர்..!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:June 12, 2025 12:43 PM IST

147.3 கி.மீ வேகத்தில் பந்து வீசி பிரணவ் ராகவேந்திரா அனைவரையும் கவர்ந்துள்ளார்.

மெக்ராத் - பிரணவ் ராகவேந்திராமெக்ராத் - பிரணவ் ராகவேந்திரா
மெக்ராத் – பிரணவ் ராகவேந்திரா

வேலூரைச் சேர்ந்த 17 வயதான வேகப்பந்து வீச்சாளர் ஆர்.டி. பிரணவ் ராகவேந்திரா தான் தற்போது இந்திய கிரிக்கெட் உலகில் பேசுபொருளாக உள்ளார்.

பிசிசிஐ-யின் பெங்களூரு சிறப்பு மையத்தில் பிரணவ் ராகவேந்திரா 147.3 கி.மீ வேகத்தில் பந்து வீசியது அனைவரையும் கவர்ந்துள்ளது.

முதலில் ஓட்டப்பந்தய வீரராக இருந்த பிரணவ், கிரிக்கெட்டின் பக்கம் தனது கவனத்தை மாற்றினார். மிகவும் வேகமாக பந்து வீச வேண்டும் எனக் கூறும் அவர், பேட்ஸ்மேனுக்கு பவுன்சர்கள் வீசி அவர்களை பயமுறுத்த வேண்டும், சரியான லைனில் வீச வேண்டும் எனக் கூறுகிறார்.

மேலும் வேகமாக பந்து வீச வேண்டும் என்பதால், உடலை சரியாக வைத்திருக்க வேண்டும். அடுத்த ஆண்டு நடைபெறும் U-19 உலகக்கோப்பையில் விளையாட வேண்டும் என பிரணவ் விருப்பம் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத்-யிடம் பயிற்சி எடுத்துக்கொண்ட பிரணவ், 16 வயதிலேயே 139 கி.மீ வேகத்தில் பந்து வீசி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். இன்னும் சில நாட்களில், அவரது வேகம் 150 கி.மீ-யைத் தாண்டும் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

எம்.ஆர்.எஃப் பேஸ் பவுண்டேஷனின் தலைமை பயிற்சியாளர் செந்தில்நாதன் கூறும்போது, “பிரணவிற்கு வேகம் மிகப்பெரிய பலமாக இருந்துள்ளது. 130 கி.மீ என்று அவரிடம் இருந்த வேகம், இரண்டு ஆண்டுகளில் 145 கி.மீ ஆக உயர்ந்துள்ளது. அவருக்கு வேகப்பந்து வீச்சு இயற்கையாக வருகிறது. ஆனால் அதை அவர் எப்படி கட்டுப்படுத்துகிறார் என்பதுதான் முக்கியம்.

இந்த வயதில் அவர் சிறப்பாக பந்து வீசுகிறார். அவரை இன்னும் தயார் படுத்த வேண்டும். வேகத்தை விடவும் அதைக் கட்டுப்படுத்துவது முக்கியம். அதை அவரும் நன்கு உணர்ந்திருக்கிறார்” எனத் தெரிவித்தார்.

பிரணவ் இதுவரை 2 ஃபர்ஸ்ட் கிளாஸ் போட்டிகளிலும், டிஎன்பிஎல்-யில் திருப்பூர் அணியிலும் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

First Published :

June 12, 2025 12:23 PM IST

Read More

Previous Post

விபத்துதான்! உறுதிசெய்தது ஏர் இந்தியா!

Next Post

ITR தாக்கல் செய்யும்போது படிவம் 16 மற்றும் 16A-ஐ எப்படி பயன்படுத்துவது…? அவசியம் தெரிஞ்சுக்கோங்க…

Next Post
ITR தாக்கல் செய்யும்போது படிவம் 16 மற்றும் 16A-ஐ எப்படி பயன்படுத்துவது…? அவசியம் தெரிஞ்சுக்கோங்க…

ITR தாக்கல் செய்யும்போது படிவம் 16 மற்றும் 16A-ஐ எப்படி பயன்படுத்துவது…? அவசியம் தெரிஞ்சுக்கோங்க...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin