Last Updated:
1959-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, ராஞ்சியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் மெக்கான் நிறுவனம், நாட்டின் எஃகுத் துறை வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றி வருகிறது
மத்திய எஃகு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான மெக்கான் (MECON) நிறுவனத்திற்கு மினிரத்னா வகை-1 அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று நிதியாண்டுகளாக தொடர்ச்சியாக லாபம் ஈட்டி வரும் இந்நிறுவனம், வரிக்கு முந்தைய லாபமாக 2023-24-ம் நிதியாண்டில் 77.62 கோடி ரூபாயும், 2024-25-ம் நிதியாண்டில் 32.08 கோடி ரூபாயும், 2025-26-ம் நிதியாண்டில் 104.53 கோடி ரூபாயும் பதிவு செய்துள்ளது. கடந்த மார்ச் 31 நிலவரப்படி, இந்நிறுவனத்தின் நிகர மதிப்பு 535.42 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் மினிரத்னா வகை-1 அந்தஸ்துக்கான தகுதிகளை இந்நிறுவனம் பூர்த்தி செய்துள்ளது.
இந்த அந்தஸ்து கிடைத்துள்ளதால், மெக்கான் நிறுவனத்தின் இயக்குநர் குழுவுக்கு கூடுதல் நிதி, நிர்வாக அதிகாரங்கள் வழங்கப்படும். இதன் மூலம் முதலீடு, நவீனமயமாக்கல், தொழில்நுட்ப மேம்பாடு, தொழில் விரிவாக்கத் திட்டங்களை விரைவாக செயல்படுத்த இயலும்.
1959-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, ராஞ்சியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் மெக்கான் நிறுவனம், நாட்டின் எஃகுத் துறை வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றி வருகிறது. சுரங்கம், உள்கட்டமைப்பு, மின்சாரம், எண்ணெய், எரிவாயு உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் தனது சேவையை விரிவுபடுத்தியுள்ளது.


