1996 ஆம் ஆண்டு பரவூர் தொகுதியில் முதன்முறையாக தேர்தலில் போட்டியிட்ட சதீசனுக்கு தோல்வியே கிட்டியது. அதன் பிறகு, 2001 ஆம் ஆண்டு அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வி.டி. சதீசன், 2006 முதல் 2026 வரை வெற்றியை மட்டுமே ருசித்து, பரவூர் தொகுதியை தனது கோட்டையாக மாற்றினார். கடந்த ஆட்சியில் எதிர்க்கட்சி தலைவராக இருந்த சதீசன், பொதுமக்களின் பிரச்னைகள், நிர்வாக குறைபாடுகள், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார்.


