
யாழ்ப்பாணத்தில் பிறந்து 25 நாட்களேயான ஆண் சிசு ஒன்று, மூளையில் கிருமித் தொற்று ஏற்பட்டதன் காரணமாக மரணித்துள்ளது.
யாழ்ப்பாணம், கந்தர்மடத்தைச் சேர்ந்த சிசுவே இவ்வாறு மரணித்துள்ளது.
கடந்த செப்டெம்பர் மாதம் 27ஆம் திகதியன்று, தனியார் வைத்தியசாலையில் சிசு பிறந்துள்ளது.
இந்நிலையில் காய்ச்சல் ஏற்பட்டதால், இம்மாதம் 1ஆம் திகதியன்று, யாழ். போதனா வைத்தியசாலையில் சிசு அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை (21) சிசு மரணித்துள்ளது.
மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW

