• Login
Sunday, April 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மூன்று லட்சம் பேருடன் யோகா செய்த பிரதமர் நரேந்திர மோடி..! மனித வாழ்க்கையில் சமநிலை ஏற்படுத்தும் கருவி என பேச்சு

GenevaTimes by GenevaTimes
June 21, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
மூன்று லட்சம் பேருடன் யோகா செய்த பிரதமர் நரேந்திர மோடி..! மனித வாழ்க்கையில் சமநிலை ஏற்படுத்தும் கருவி என பேச்சு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:June 21, 2025 9:42 AM IST

சர்வதேச யோகா தினத்தையொட்டி விசாகப்பட்டினத்தில் பிரதமர் நரேந்திர மோடி மூன்று லட்சம் பேருடன் யோகாசனம் செய்தார்.

பிரதமர் நரேந்திர மோடிபிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி

சர்வதேச யோகா தினத்தையொட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மூன்று லட்சம் பேருடன் இணைந்து பிரதமர் நரேந்திர மோடி யோகாசனம் செய்தார்.

11 ஆவது சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, இந்தியாவில் ஒரே பூமி, ஒரே ஆரோக்கியத்திற்கான யோகா என்ற கருப்பொருளில் பல்வேறு நகரங்களில் யோகா நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தின் ஆர்.கே. கடற்கரையில் பிரதமர் மோடி தலைமையில் பிரமாண்ட யோகா நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பிரதமர் மோடியை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவும், துணை முதலமைச்சர் பவன் கல்யாணும் நினைவுப் பரிசு வழங்கி வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து லட்சக்கணக்கானோருடன் சேர்ந்து பிரதமர் மோடி யோகாசனங்களை செய்தார்.

இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, துணை முதலமைச்சர் பவன் கல்யாண், கடற்படையைச் சேர்ந்த 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள், அவர்களது குடும்பத்தினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு யோகாசனம் செய்தனர்.

முன்னதாக பேசிய பிரதமர் மோடி, யோகா ஒட்டுமொத்த உலகத்தையும் ஒன்றிணைப்பதாக பெருமிதம் தெரிவித்தார். யோகா என்பது வயது, மக்களின் பின்னணி என எந்த எல்லைக்கும் அப்பாற்பட்டு அனைவருக்கும் பொதுவானது என்றும் கூறினார்.

உலகம் முழுவதும் பதற்றம், அமைதியின்மை மற்றும் பல பிராந்தியங்களில் நிலையற்ற தன்மை அதிகரித்து வருவதாக பிரதமர் கவலை தெரிவித்தார். இதுபோன்ற சூழலில் யோகா அமைதிக்கான வழியை காட்டுவதாகவும் கூறினார். மனித வாழ்க்கையில் சமநிலையை ஏற்படுத்த யோகா முக்கிய கருவியாக இருப்பதாகக் கூறிய பிரதமர், மிகப்பெரிய மருத்துவ நிறுவனங்கள் கூட யோகா குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

June 21, 2025 9:42 AM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

மூன்று லட்சம் பேருடன் யோகா செய்த பிரதமர் நரேந்திர மோடி..! மனித வாழ்க்கையில் சமநிலை ஏற்படுத்தும் கருவி என பேச்சு

Read More

Previous Post

இங்கிலாந்தில் 10 பெண்கள் வன்புணர்வு – சீன மாணவனுக்கு ஆயுள் தண்டனை

Next Post

டிராவை நோக்கி காலே டெஸ்ட் போட்டி | galle Test match heading towards draw sri lanka versus bangladesh

Next Post
டிராவை நோக்கி காலே டெஸ்ட் போட்டி | galle Test match heading towards draw sri lanka versus bangladesh

டிராவை நோக்கி காலே டெஸ்ட் போட்டி | galle Test match heading towards draw sri lanka versus bangladesh

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin