முக்கியத்துவம் பெறும் ரூ.500 நோட்டுகள்
தற்போது பணப்பரிமாற்றத்தில் மிக முக்கியத்துவம் பெறும் ரூபாய் நோட்டுகளில் ரூ.500தான் முன்னிலையில் உள்ளது. ஆனால், இதில்தான் அதிக போலி நோட்டுகளும் புழக்கத்தில் விடப்படுகிறதாம். அதாவது 2018 – 19ஆம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் 218 கோடி ரூ.500 நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது கடந்த 2022-23ஆம் ஆண்டில் 910 கோடி நோட்டுகளாக அதிகரித்திருந்தது. அடுத்த ஆண்டில் 857 கோடி நோட்டுகளாகக் குறைந்திருந்தது.
ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, படிப்படியாக போலி 500 ரூபாய் நோட்டுகள் அதிகரித்திருப்பதும், கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும், கண்டுபிடிக்கப்பட்ட போலி ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை நான்கு மடங்காகியிருப்பதும் தரவுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
அதுபோல, 2020 – 21ஆம் ஆண்டிலிருந்து ரூ.2000 போலி நோட்டுகள் கண்டுபிடிக்கப்படுவது மூன்று மடங்காகியிருக்கிறதாம்.
ஆனால், 2000 ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்தே அது விரைவாக திரும்பப் பெறப்படும் என்ற தகவல்கள் பரவி வந்ததால், அடுத்தடுத்த ஆண்டுகளில், போலி நோட்டுகள் புழக்கம் குறைந்து வந்துள்ளது.

