மான்சூன் தமாகா டெபாசிட் (Monsoon Dhamaka Deposit Scheme) என்ற புதிய ஃபிக்ஸட் டெபாசிட் (FD) திட்டத்தை பரோடா வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. ஜூலை 15-ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ள இந்த டெபாசிட் திட்டத்தில் ரூ.3 கோடிக்கும் குறைவாக முதலீடு செய்பவர்களுக்கு அதிக வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.
இந்த டெபாசிட் திட்டம் இரண்டு வகைகளில் வந்துள்ளது. அதாவது 399 நாட்கள் டெபாசிட் செய்யப்படும் தொகைக்கு ஆண்டுக்கு 7.25 சதவிகித வட்டி விகிதமும் 333 நாட்கள் வரையுள்ள டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தொகைக்கு 7.15 சதவிகித வட்டி விகிதமும் தரப்படுகிறது.
மான்சூன் தமாகா டெபாசிட் திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு கூடுதல் பலன்கள்
399 நாட்களில் முதிர்ச்சி அடையும் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யும் மூத்த குடிமக்களுக்கு கூடுதலாக 0.50 சதவிகிதம் அதிகமாக ஆண்டுக்கு 7.75 வட்டி விகிதம் தரப்படுகிறது. மேலும் முதிர்ச்சி அடையும் முன் திரும்ப எடுக்க முடியாத திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.1 கோடி முதல் ரூ.3 கோடிக்கும் குறைவாக முதலீடு செய்யும் மூத்த குடிமக்களுக்கு இன்னும் கூடுதலாக 0.15 சதவிகிதம் வட்டி கிடைக்கிறது என பரோடா வங்கி கூறியுள்ளது.
இதையும் படிக்க:
ஓய்வுக்குப் பிறகு EPFO மூலம் எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்? இது உங்களுக்கு தெரியுமா?
மான்சூன் தமாகா டெபாசிட் திட்டத்தில் அதிகபட்சம் வட்டி விகிதம் எவ்வுளவு?
இந்த டெபாசிட் திட்டத்தில், 399 நாட்களில் முதிர்ச்சி அடையும் திட்டத்திற்கு அதிகபட்சமாக ஆண்டுக்கு 7.90 சதவிகிதம் வட்டி விகிதம் தரப்படுகிறது. இதில் மூத்த குடிமக்களுக்கு கிடைக்க கூடிய 0.50 சதவிகிதமும் முதிர்ச்சி அடைவதற்கு முன் எடுக்க முடியாத டெபாசிட் திட்டங்களுக்கு (non-callable deposits) தரக்கூடிய 0.15 சதவிகிதமும் அடங்கும்.
வட்டி விகிதங்கள் குறித்த முழுமையான விவரங்கள்:
7 நாட்கள் முதல் 10 வருடங்கள் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு 4.25 சதவிகிதம் முதல் 7.25 சதவிகிதம் வரையில் வட்டி விகிதம் தருகிறது பரோடா வங்கி. இதன் முழுமையான விவரங்களை கீழே தந்துள்ளோம். இதில் உங்களுக்கு தேவைப்படும் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களை தேர்வு செய்து கொள்ளலாம்.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் அம்ரித் விருஷி (Amrit Vrishchi) திட்டம்:
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ (SBI) சமீபத்தில் அம்ரித் விருஷி என்ற பெயரில் 444 நாட்களில் முதிர்ச்சி அடையும் புதிய டெபசிட் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு ஆண்டுக்கு 7.25 சதவிகிதம் வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. அதிலும் கூடுதல் சிறப்பாக மூத்த குடிமக்களுக்கு 0.50 சதவிகித அதிகமாக, ஆண்டுக்கு 7.75 சதவிகிதம் வட்டி கிடைக்கிறது. இந்த டெபாசிட் திட்டமானது 2025 மார்ச் 31 வரை செயல்பாட்டில் இருக்கும்.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)