Last Updated:
ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதால் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் எண்ணெய்க் கப்பல்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதன் எதிரொலியாக டீசல் உள்ளிட்ட எரிபொருள் ஏற்றுமதிக்கு சீனா தடை விதித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இஸ்ரேல், அமெரிக்கா உடனான போர் காரணமாக ஹார்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அறிவித்தது. உலகின் 25 சதவீத கச்சா எண்ணெய் போக்குவரத்து நடைபெறும் ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதால் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் எண்ணெய்க் கப்பல்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் எண்ணெய் கப்பல்கள்
இந்நிலையில், டீசல் உள்ளிட்ட எரிபொருள் ஏற்றுமதியை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு எண்ணெய் நிறுவனங்களுக்கு சீனாவின் வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையம் வாய்வழியாக உத்தரவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேநேரம் 9 கோடி பேரல் கச்சா எண்ணெய் சீனாவிடம் கையிருப்பு இருப்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிக்க பாகிஸ்தான் முழுவதும் அனைத்துவிதமான ஊழியர்களும் வீட்டில் இருந்து பணியாற்றும் கொள்கை முறையை அறிமுகப்படுத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

