[ad_1]
கோலாலம்பூர்:
இன்று இரவு முதல் திங்கட்கிழமை அதிகாலை வரை நாடு முழுவதும் அபூர்வமான முழு சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இது பொதுவாக ரத்த நிலவு என அழைக்கப்படுவதாக
மலேசியா விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.
7 ஆம் தேதியான இன்று இரவு 11.28 மணிக்கு பௌர்ணமி நிலவில் கிரகணம் படரத் தொடங்கும்.
பின்னர், இரவு 12.26 மணிக்கு பகுதி கிரகணம் தொடங்கும். அப்போது சந்திரன் ஒரு பகுதி கருமையாக காணப்படும்.
முழு கிரகண நிலை அதிகாலை 1.30 மணிக்கு தொடங்கி, 2.11 மணிக்கு உச்ச கட்டத்தை எட்டும். அதன் பிறகு, 2.53 மணிக்கு முழு கிரகணம் முடிந்து, 3.56 மணிக்கு பகுதி கிரகணம் முடியும். 4.55 மணிக்கு கிரகணம் முழுவதும் நிறைவடையும் என அது தெரிவித்துள்ளது.
மலேசியாவில் இந்த கிரகணம் முழுவதும் காணக்கூடியதாக இருக்கும். வானிலை தெளிவாக இருந்தால், நேரடியாக கண்களால் அல்லது தொலைநோக்கி மூலம் தெளிவாகக் காணலாம்.
இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த, அறிவியல், தொழில்நுட்ப புதுமை அமைச்சகம் , நாட்டின் பல்வேறு விண்காட்சி மையங்களில் பொதுமக்களை அழைத்து, இந்த அபூர்வ நிகழ்வைப் பார்க்கும் வாய்ப்பையும் வானியல் அறிவை மேம்படுத்தும் நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.