• Login
Saturday, March 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

முல்லை பெரியாறு அணை வழக்கு: கேரளா அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

GenevaTimes by GenevaTimes
May 6, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
முல்லை பெரியாறு அணை வழக்கு: கேரளா அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 06, 2025 4:55 PM IST

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கேரளா அரசுக்கு மேற்பார்வைக் குழு பரிந்துரைகளை இரண்டு வாரத்தில் செயல்படுத்த உத்தரவிட்டுள்ளது.

News18News18
News18

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் மேற்பார்வைக் குழு பரிந்துரைகளைச் செயல்படுத்த வேண்டும் என கேரளா அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாகத் தமிழ்நாடு அரசு, கேரளா அரசு, தனிநபர் உள்ளிட்டோர் தொடர்ந்த மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த், திபாங்கர் தத்தா மற்றும் கோடீஸ்வர் சிங் அடங்கிய அமர்வு கேரளா அரசிற்கு உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.

இந்த வழக்கு விசாரணையில் தமிழ்நாடு அரசு, “கடந்த 19 ஆண்டுகளாகப் புதிய அணை கட்ட வேண்டும் என கேரளா கூறி வருகிறது. ஆனால், தற்போது இருக்கும் அணையில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள அனுமதிக்காமல் இருக்கிறது. உச்சநீதிமன்ற உத்தரவுகளைச் செயல்படுத்தவும் கூட கேரளா முட்டுக்கட்டையாக இருக்கிறது” என வாதிட்டது.

இதேபோல், கேரளா அரசு, “தமிழக அரசைப் பொறுத்தவரைக்கும் அணையைப் பராமரிப்பதற்கு அவர்கள் விருப்பம் காட்டவில்லை. மாறாக அணையின் நீர்மட்டத்தை உயர்த்தவே ஆர்வம் காட்டுகின்றனர்” எனும் வாதத்தை முன்வைத்தது.

அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்றம், “முல்லை பெரியாறு அணையைப் பராமரிக்க மேற்பார்வைக் குழு ஏப்ரல் 25ஆம் தேதி வழங்கி உள்ள பரிந்துரைகளை கேரளா அரசு செயல்படுத்த வேண்டும். மேலும், அணை பராமரிப்பு, அதற்கான ஒத்துழைப்பு வழங்குதல் உள்ளிட்ட மேற்பார்வைக் குழு பரிந்துரைகளை இரண்டு வாரத்தில் செயல்படுத்த வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

Read More

Previous Post

வவுனியாவில் வாக்களிப்பு வீதம் தொடர்பில் வெளியான தகவல்

Next Post

உங்களுக்கு இரண்டாவது கிரெடிட் கார்டு தேவையா…? அதற்கு எத்தனை நாட்கள் காத்திருப்பது சிறந்தது…?

Next Post
உங்களுக்கு இரண்டாவது கிரெடிட் கார்டு தேவையா…? அதற்கு எத்தனை நாட்கள் காத்திருப்பது சிறந்தது…?

உங்களுக்கு இரண்டாவது கிரெடிட் கார்டு தேவையா...? அதற்கு எத்தனை நாட்கள் காத்திருப்பது சிறந்தது...?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin