• Login
Sunday, March 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

முல்லைத்தீவு ஊடக அமையத்தினால் கருப்பு ஜனவரி அனுஷ்டிப்பு

GenevaTimes by GenevaTimes
January 31, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
முல்லைத்தீவு ஊடக அமையத்தினால் கருப்பு ஜனவரி அனுஷ்டிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



Courtesy: thavaseelan

 முல்லைத்தீவு ஊடக அமையத்தினால் கருப்பு ஜனவரி தினத்தை அனுஷ்டிக்கும் முகமாக
ஊடகவியலாளர்களுக்கான அஞ்சலி நிகழ்வும் கறுப்பு ஜனவரி தொடர்பான துண்டு
பிரசுரங்கள் விநியோகிக்கும் நிகழ்வு இன்று (31) இடம் பெற்றது.



நீதிக்காக குரல்கொடுத்த சுமார் 50 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டும்
காணாமல் ஆக்கப்பட்டும் உள்ளார்கள். ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்கள் பல
இடம்பெற்றுள்ளன.

கொலைகளுக்கு நீதி கோரி தொடர்ச்சியான போராட்டம்

இவற்றில் பெரும்பாலானவை ஜனவரி மாதத்திலேயே இடம் பெற்றிருக்கின்றன அந்த
வகையில் ஜனவரி மாதத்தை ஊடகவியலாளர்கள் கருப்பு ஜனவரியாக அனுஷ்டித்து
வருகின்றார்கள்

குறித்த மாதத்தில் உயிரிழந்த ஊடகவியலாளர்களை நினைவு கூருகின்ற அதே வேளையில்
அவர்களுடைய கொலைகளுக்கு நீதி கோரி தொடர்ச்சியான போராட்டங்களையும் முன்னெடுத்து
வருகின்றனர்

முல்லைத்தீவு ஊடக அமையத்தினால் கருப்பு ஜனவரி அனுஷ்டிப்பு | Mullai Media Association Observes Black January


அந்த வகையில் யார் ஆட்சிக்கு வந்தாலும் இன்று வரை அவர்களுக்கான நீதி
கிடைக்காத நிலைமையில் தொடர்ச்சியாகவும் ஊடகவியலாளர்கள் இந்த ஜனவரி மாதத்தை
கறுப்பு ஜனவரியாக அனுஷ்டித்து வருகின்றனர்

நினைவேந்தல் நிகழ்வு 



முல்லைத்தீவு ஊடக அமையத்தின் தலைவர் சண்முகம் தவசீலன் தலைமையில் இடம்பெற்ற
நிகழ்வில் முன்னதாக முல்லைத்தீவு ஊடக அமையத்திலே திருகோணமலையில் ஐந்து
மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் உண்மையை வெளிப்படுத்தியதால் சுட்டு
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜன் மற்றும் படுகொலை
செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க மற்றும் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட ஆகியோருடைய நினைவேந்தல் நிகழ்வு
அனுஷ்டிக்கப்பட்டது

முல்லைத்தீவு ஊடக அமையத்தினால் கருப்பு ஜனவரி அனுஷ்டிப்பு | Mullai Media Association Observes Black January





மறைந்த ஊடகவியலாளர்களின் படங்களுக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு சுடர் ஏற்றப்பட்டு மலர் தூவி
அகவணக்கம் செலுத்தப்பட்டு அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது

துண்டுப்பிரசுர விநியோகம்


இதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு ஊடகவியலாளர்கள் முல்லைத்தீவு நகரிலும்
முல்லைத்தீவு பேருந்து நிலையத்திலும் கறுப்பு ஜனவரி தொடர்பான துண்டுப்
பிரசுரங்களை விநியோகிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்

முல்லைத்தீவு ஊடக அமையத்தினால் கருப்பு ஜனவரி அனுஷ்டிப்பு | Mullai Media Association Observes Black January



குறித்த துண்டுப்பிரசுரத்தில் தமிழ் ஊடகவியலாளர் சுப்ரமணியம் சுகிர்தராஜன்
எம்மோடு இருந்திருந்தால் இன்று அவருக்கு 56 வயதாகியிருக்கும். ஆனால்,
வேதனையளிக்கும் விதத்தில் 20 ஆண்டுகளிற்கு முன்னர் அவரது 36 ஆவது அகவையில்
அரச கொலையாளிகளால் அவர் படுகொலை செய்யப்பட்டார்.



கிழக்கு கடற்கரை நகரான திருகோணமலையில், 2006 ஆம் ஆண்டின் இரண்டாவது நாள்.
ஐந்து மாணவர்கள் எப்படி படுகொலை செய்யப்பட்டனர் என்பதை மறுக்க முடியாத
புகைப்பட ஆதாரத்துடன் அவர் நிரூபித்ததால் அவர் அரச படைகளால் சுட்டுக்
கொல்லப்பட்டார்.


அந்த மாணவர்கள் எடுத்துச் சென்ற குண்டு வெடித்ததாலேயே அவர்கள் உயிரிழந்தனர்
என்று இலங்கை அரசு கூச்சமின்றி பச்சைப் பொய் கூறியது (அல்லது உண்மையை மூடி
மறைக்கும் வகையில் பச்சைப் பொய் கூறியது).

ஆனால், சுகிர்தராஜன் உண்மையை
உலகிற்கு வெளிப்படுத்தினார். இதனாலேயே அவர் சுட்டுக்கொல்லப்பட்டார்

இதற்கு நான்கு ஆண்டுகளுக்கு பிறகு 2010 தலைநகரில் அதே ஜனவரி மாதத்தில்
கடத்தப்பட்ட பிரகீத் எக்னலிகொட உட்பட பலரும் இதே போன்ற துர்ப்பாக்கிய நிலைக்கு
ஆளானார்கள்.



சுகிர்தராஜனிற்கு முன்னரும் பிறகும் இவ்வாறு உண்மைகளை வெளிக்கொண்டுவந்ததனால்
வலிந்து காணமால் ஆக்கப்பட்ட அல்லது கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின்
எண்ணிக்கைகளைக் கூட்டினால் அது 50 ஐ எட்டும். அதில் பெரும்பாலானவர்கள்
தமிழர்கள். அதிலும் அதிகளவானாவர்கள் ஜனவரி மாதம் பலியாயினர்.

ஊடக நிறுவனங்கள் மீதும் தாக்குதல்கள்


இதனைவிட ஊடக நிறுவனங்கள் மீதும் தாக்குதல்கள் பலவும் இடம்பெற்றன இவையும்
அதிகளவில் இதே ஜனவரி மாதத்தில் தான் இடம்பெற்றன

இதன் காரணமாக ஜனவரி மாதமே ஊடகவியலாளர்களுக்கு கறுப்பு மாதமாக உள்ளது.

முல்லைத்தீவு ஊடக அமையத்தினால் கருப்பு ஜனவரி அனுஷ்டிப்பு | Mullai Media Association Observes Black January


குற்றமிழைத்தவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்படாதது மட்டுமின்றி அவர்கள்
சலுகைகளைப் பெற்றுக்கொள்ளுவது. மேலும் உண்மையைக் கண்டறிந்து நீதியை நிலை நாட்ட
தொடர்ச்சியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்கள் எந்த நவடிக்கையும் எடுக்கத்
தவறியதால் இன்று முழு நாடும் இருண்டு போயுள்ளது. என குறிப்பிடப்பட்டுள்ளது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

நவீன வாழ்க்கை, காற்று மாசுபாடு;டெல்லியில் இதய நோய்களால் இறப்பு அதிகரிப்பு | Makkal Osai

Next Post

ஐதராபாத்: ஏடிஎம் மையத்தில் வியாபாரியை துப்பாக்கியால் சுட்டு ரூ.6 லட்சம் கொள்ளை – படுபயங்கர சம்பவத்தில் போலீஸ் நடவடிக்கை என்ன…? | India News (இந்தியா செய்திகள்)

Next Post
ஐதராபாத்: ஏடிஎம் மையத்தில் வியாபாரியை துப்பாக்கியால் சுட்டு ரூ.6 லட்சம் கொள்ளை – படுபயங்கர சம்பவத்தில் போலீஸ் நடவடிக்கை என்ன…? | India News (இந்தியா செய்திகள்)

ஐதராபாத்: ஏடிஎம் மையத்தில் வியாபாரியை துப்பாக்கியால் சுட்டு ரூ.6 லட்சம் கொள்ளை - படுபயங்கர சம்பவத்தில் போலீஸ் நடவடிக்கை என்ன...? | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin