Last Updated:
Elon Musk vs Trump | எலான் மஸ்க், அமெரிக்கா பார்ட்டி என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார். ட்ரம்புக்கு எதிராக கருத்து தெரிவித்த மஸ்க், மக்களுக்கு சுதந்திரம் வழங்கவே இந்தக் கட்சி தொடங்கியதாக கூறியுள்ளார்.
டெஸ்லா நிறுவன சிஇஓவும் உலகின் முன்னணி கோடீஸ்வரர்களில் ஒருவருமான எலான் மஸ்க், அமெரிக்கா பார்ட்டி என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்டு டிரம்புக்கு, தொழிலதிபர் எலான் மஸ்க் முழு ஆதரவு அளித்தார்.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற நிலையில், அரசு செயல் திறன் என்ற பெயரில் புதிய துறை உருவாக்கப்பட்டு, அதன் தலைவராகவும் எலான் மஸ்க் நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் BIG BEAUTIGUL என்ற புதிய மசோதாவைக் கடுமையாக எதிர்த்த எலான் மஸ்க், ட்ரம்ப் அரசு வழங்கிய பதவியை துறந்து, ட்ரம்புக்கு எதிராக கருத்துகளை வெளியிட்டு வந்தார்.
இந்நிலையில் அமெரிக்கா பார்ட்டி என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளதாக எலான் மஸ்க் தற்போது அறிவித்துள்ளார்.
மக்களுக்கு சுதந்திரத்தை மீண்டும் வழங்க இந்தக் கட்சி தொடங்கப்பட்டுள்ளதாகவும் மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக புதிய கட்சியை தொடங்குவது குறித்து எக்ஸ் வலைதளம் வாயிலாக எலான் மஸ்க் கருத்துக் கணிப்பும் கேட்டிருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
July 06, 2025 6:39 AM IST
Elon Musk vs Trump | முற்றும் மோதல்… அமெரிக்கா பார்ட்டி என்ற புதிய கட்சியைத் தொடங்கினார் எலான் மஸ்க்!