Last Updated:
அமெரிக்கா-சீனா வணிகப் போரின் போது, அமெரிக்கா செல்லும் சீனர்களுக்கு சீன அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. டிரம்ப் சீனப் பொருட்களுக்கு 104% வரி விதித்ததைத் தொடர்ந்து, சீனாவும் பதிலடி கொடுத்துள்ளது.
அமெரிக்கா-சீனா இடையே வணிகப் போருக்கு மத்தியில் அமெரிக்காவுக்கு செல்லும் தங்கள் நாட்டினர் கவனமாக இருக்க சீனா அறிவுறுத்தியுள்ளது.
தாம் ஆட்சிக்கு வந்தால் பரஸ்பர வரியை அமல்படுத்துவேன் என்று அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்பே டிரம்ப் அறிவித்திருந்தார். வெற்றி பெற்று அதிபரான பிறகு பல்வேறு அதிரடிகளை டிரம்ப் செய்து வருகிறார்.
இந்நிலையில் அண்மையில் சீனப் பொருட்களுக்கு 104 விழுக்காடு வரியை விதித்து டிரம்ப் உலக கவனத்தை ஈர்த்தார். அமெரிக்காவின் வரி விதிப்புக்கு பதிலடி தரும் வகையில் சீனாவும் அமெரிக்கா மீது 84 விழுக்காடு பதில் வரி விதித்தது.
இதையும் படியுங்கள் : நீட் விவகாரம் – 19ஆம் தேதி அதிமுக கண்ணீர் அஞ்சலி போராட்டம் என எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான விரிசல் அதிகரித்துள்ளது. இந்த சூழலில் சீன கலாசார மற்றும் சுற்றுலா அமைச்சகம் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில் அமெரிக்கா செல்ல விரும்புவோர் கவனமுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல் சீனாவில் இருந்து அமெரிக்கா செல்லும் மாணவர்களும் கவனமுடன் இருக்க வேண்டும் என்று சீன கல்வித்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
April 10, 2025 10:15 PM IST


