• Login
Sunday, April 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

முர்ஷிதாபாத் கலவரத்தில் 3 பேர் உயிரிழப்பு.. மேற்கு வங்கத்தில் வன்முறை ஏன்? – நடந்தது என்ன?

GenevaTimes by GenevaTimes
April 12, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
முர்ஷிதாபாத் கலவரத்தில் 3 பேர் உயிரிழப்பு.. மேற்கு வங்கத்தில் வன்முறை ஏன்? – நடந்தது என்ன?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:April 12, 2025 9:57 PM IST

இன்றும் வன்முறை பல பகுதிகளில் பரவியது. நிம்திதா, ஷம்ஷெர்கஞ்ச், ஜாங்கிபூர், சுதி மற்றும் ஜாஃப்ராபாத் ஆகிய இடங்களில் பதட்டங்கள் தொடர்ந்து நிலவி வருகின்றன.

West BengalWest Bengal
West Bengal

மேற்கு வங்க மாநிலத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் வக்ஃப் திருத்த சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டங்களும் அதனை தொடர்ந்து நடந்த வன்முறை மோதல்களால் பதற்றம் நிலவி வருகிறது.

வக்ஃப் திருத்த சட்டத்துக்கு எதிராக மேற்கு வங்க மாநிலத்தின் சில பகுதிகளில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதன்பின் வன்முறை வெடித்தது. இதில், வன்முறையாளர்கள் வாகனங்களுக்குத் தீ வைக்க, அவர்களைக் கட்டுப்படுத்த போலீஸ் முயற்சி எடுத்தது. இதில் சில போலீஸார் காயமடைந்ததாகவும் சொல்லப்படுகிறது.

வன்முறை தொடர்பாக பேசிய அம்மாநில மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர், “வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பின்பு இஸ்லாமியர்கள் ஒன்று கூடி வக்ஃப் திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தினர். பின்னர், அவர்கள் டாக்பாங்லோ – சுதிர் சஜுர் மோர் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது தடுக்க வந்த போலீஸ் மீதும் கற்கள் வீசப்பட்டதில் போராட்டம் வன்முறையாக மாறியது. சில போலீஸார் காயமடைந்தனர். வன்முறையைக் கட்டுப்படுத்த போலீஸார் தடி அடி நடத்த வேண்டி இருந்தது. வன்முறையாளர்கள் வெடி பொருளை வீசியதால் போலீஸார் பதிலுக்கு கண்ணீர் புகை குண்டை பயன்படுத்தினோம்” எனக் கூறினார்.

இதற்கிடையே இன்றும் வன்முறை பல பகுதிகளில் பரவியது. நிம்திதா, ஷம்ஷெர்கஞ்ச், ஜாங்கிபூர், சுதி மற்றும் ஜாஃப்ராபாத் ஆகிய இடங்களில் பதட்டங்கள் தொடர்ந்து நிலவி வருகின்றன. இந்த வன்முறைகளில் தந்தை மகன் உட்பட 3 உயிரிழந்துள்ளனர். மேலும், கலவரம் தொடர்பாக இதுவரை 138 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read | ’குட் பேட் அக்லி’ படத்தில் அஜித்தின் மகனாக நடித்தவர் யார் தெரியுமா? 

இதற்கிடையே, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெளியிட்ட எக்ஸ் பதிவில், “ஒவ்வொரு மனித உயிரும் விலைமதிப்பற்றது, அரசியலுக்காக கலவரத்தைத் தூண்டிவிடாதீர்கள். கலவரத்தைத் தூண்டுபவர்கள் சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கிறார்கள். நினைவில் கொள்ளுங்கள், பலர் வன்முறையை ஏற்படுத்தும் சட்டத்தை நாங்கள் உருவாக்கவில்லை. சட்டம் மத்திய அரசால் உருவாக்கப்பட்டது. எனவே நீங்கள் விரும்பும் பதிலை மத்திய அரசிடமிருந்து பெற வேண்டும். வக்ஃப் திருத்த சட்டம் குறித்து எங்கள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளோம். வக்ஃப் திருத்த சட்டம் மேற்கு வங்கத்தில் செயல்படுத்தப்படாது.” என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

Location :

Chennai [Madras],Chennai,Tamil Nadu

First Published :

April 12, 2025 9:57 PM IST

Read More

Previous Post

வாட்ஸ்அப் செயலிழந்தது

Next Post

ஐபிஎல் 2025: ஷமி மிக மோசமான சாதனை.. பவுலர்களை புரட்டி எடுத்த பஞ்சாப் கிங்ஸ்.. சன் ரைசர்ஸ் அணிக்கு கடினமான இலக்கு

Next Post
ஐபிஎல் 2025: ஷமி மிக மோசமான சாதனை.. பவுலர்களை புரட்டி எடுத்த பஞ்சாப் கிங்ஸ்.. சன் ரைசர்ஸ் அணிக்கு கடினமான இலக்கு

ஐபிஎல் 2025: ஷமி மிக மோசமான சாதனை.. பவுலர்களை புரட்டி எடுத்த பஞ்சாப் கிங்ஸ்.. சன் ரைசர்ஸ் அணிக்கு கடினமான இலக்கு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin