• Login
Saturday, April 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

மும்பை, பஞ்சாப் அணி கேப்டன்களுக்கு அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்.. என்ன காரணம் தெரியுமா?

GenevaTimes by GenevaTimes
June 2, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
மும்பை, பஞ்சாப் அணி கேப்டன்களுக்கு அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்.. என்ன காரணம் தெரியுமா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:June 02, 2025 7:31 PM IST

இறுதிப்போட்டி நாளை அகமதாபாத் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன.

ஷ்ரேயாஸ் ஐயர் - ஹர்திக் பாண்ட்யாஷ்ரேயாஸ் ஐயர் - ஹர்திக் பாண்ட்யா
ஷ்ரேயாஸ் ஐயர் – ஹர்திக் பாண்ட்யா

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் குவாலிஃபயர் 2 போட்டியில் விளையாடிய மும்பை மற்றும் பஞ்சாப் அணிகளின் கேப்டன்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் விளையாடிய நிலையில், பிளே ஆஃப் சுற்றுக்கு மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் தகுதி பெற்றன. இதில் தரவரிசை அடிப்படையில் குவாலிஃபயர் 1 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.

இதில் ஆர்சிபி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக முன்னேறியது. இன்னொரு பக்கம் எலிமினேட்டர் சுற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி வெளியேற்றியது. அதைத் தொடர்ந்து குவாலிஃபயர் 2 போட்டியில் நேற்று மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் அகமதாபாத் மைதானத்தில் களம் கண்டன. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் குவித்தது.

இதையடுத்து 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணி 19 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 27 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இவை ஒரு பக்கம் இருந்தாலும், மிக மெதுவாக பந்து வீசிய காரணத்தால் பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருக்கும், மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

2ஆவது முறையாக பஞ்சாப் அணி விதியை மீறியதால் ஷ்ரேயாஸ் ஐயருக்கு ரூ.  24 லட்சமும், 3 ஆவது முறையாக மும்பை அணி தாமதமாக பந்து வீசியதால் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ரூ. 30 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே இறுதிப்போட்டி நாளை அகமதாபாத் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன.

ஒரு பக்கம் ஸ்ரேயாஸ் ஐயர் இந்த தொடர் முழுவதுமே மிகச் சிறப்பான ஆட்டத்தையும் தலைமைத்துவத்தையும் வெளிப்படுத்தி வருகிறார். இன்னொரு பக்கம் 17 ஆண்டுகளாக கோப்பையை வெல்லாத ஆர்சிபி அணி இறுதிப் போட்டியில் விளையாடுகிறது. இதனால் நாளை ஆட்டம் ரசிகர்களுக்கு மிகப்பெரும் விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

First Published :

June 02, 2025 7:31 PM IST

Read More

Previous Post

கணவன் – மனைவி தகராறில் அடுத்தடுத்து நடந்த விபரீதம்.. பெங்களூருவில் அதிர்ச்சி சம்பவம்! – என்ன நடந்தது?

Next Post

லிந்துல நகர சபையின் முன்னாள் தலைவருக்கு விளக்கமறியல்

Next Post
லிந்துல நகர சபையின் முன்னாள் தலைவருக்கு விளக்கமறியல்

லிந்துல நகர சபையின் முன்னாள் தலைவருக்கு விளக்கமறியல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin