• Login
Wednesday, April 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் ஹைதராபாத்: ராஜீவ் காந்தி மைதானத்தில் இன்று பலப்பரீட்சை | srh to play with mumbai indians today ipl 2025 match preview

GenevaTimes by GenevaTimes
April 23, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் ஹைதராபாத்: ராஜீவ் காந்தி மைதானத்தில் இன்று பலப்பரீட்சை | srh to play with mumbai indians today ipl 2025 match preview
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஹைதராபாத்: ஐபிஎல் லீக் போட்​டி​யில் இன்று இரவு 7.30 மணிக்கு மும்பை இந்​தி​யன்​ஸ், சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணி​கள் பலப்​பரீட்சை நடத்​தவுள்​ளன.

ஹைத​ரா​பாத்​தி​லுள்ள ராஜீவ் காந்தி சர்​வ​தேச மைதானத்​தில் இந்​தப் போட்டி நடை​பெறவுள்​ளது. ஹைத​ரா​பாத் அணி இது​வரை 7 போட்​டிகளில் விளை​யாடி 2 வெற்​றி, 5 தோல்வி​களைப் பெற்று 4 புள்​ளி​களை மட்​டுமே பெற்று பட்​டியலில் 9-வது இடத்​தில் உள்​ளது. எஞ்​சி​யுள்ள 7 போட்​டிகளில் வெற்றி பெற்​றால் மட்​டுமே அந்த அணி பிளே ஆஃப் சுற்​றுக்கு செல்ல வாய்ப்​புள்​ளது.

அந்த அணி இது​வரை ராஜஸ்​தான், பஞ்​சாப் அணி​களை மட்​டுமே வீழ்த்​தி​யுள்​ளது. வலு​வான டெல்​லி, லக்​னோ, மும்​பை, கொல்​கத்​தா, குஜ​ராத் அணி​களிடம் அந்த அணி வீழ்ந்​துள்​ளது.

கடந்த 17-ம் தேதி மும்பை அணி​யுட​னான போட்​டி​யில் 4 விக்​கெட் வித்​தி​யாசத்​தில் ஹைத​ரா​பாத் அணி தோல்வி கண்​டது. இந்​நிலை​யில் இன்​றைய போட்​டி​யில் மும்​பையை வீழ்த்​தி, பதிலடு கொடுக்​கும் முனைப்​பில் ஹைத​ரா​பாத் அணி களமிறங்​க​வுள்​ளது.

தொடக்க வீரர்​கள் அபிஷேக் சர்​மா, டிரா​விஸ் ஹெட் ஆகியோர் சிறப்​பாக விளை​யாடி வரு​கின்​றனர். அவர்​களிட​மிருந்து மேலும் ஒரு சிறப்​பான இன்​னிங்ஸ் இன்​றைய ஆட்​டத்​தில் வெளிப்​படக்​கூடும். அதே​போல் இஷான் கிஷன், நித்​திஷ் ரெட்​டி, ஹென்​ரிச் கிளாசென், அனிக்​கெட் வர்​மா, கேப்​டன் பாட் கம்​மின்ஸ் ஆகியோரிட​மிருந்​தும் உயர்​மட்ட செயல்​திறன் வெளிப்​படும்​பட்​சத்​தில் அந்த அணிக்கு வெற்றி எளி​தாகலாம்.

அதே​போல் பவுலிங்​கில் பாட் கம்​மின்​ஸ், இஷான் மலிங்​கா, ஜீஷன் அன்​சா​ரி, ஹர்​ஷால் பட்​டேல் ஆகியோர் அபார​மாக பந்​து​வீசி வரு​கின்​றனர். இவர்​கள், மும்பை இந்​தி​யன்ஸ் அணி​யின் பேட்​டிங் வரிசைக்கு அழுத்​தம் கொடுக்க முயற்​சிக்​கக்​கூடும்.

அதே​நேரத்​தில், தொடர்ச்​சி​யாக தோல்வி​கள் பெற்று வந்த மும்பை இந்​தி​யன்ஸ் அணி, கடைசி​யாக தான் விளை​யாடிய 3 போட்​டிகளி​லும் வெற்றி பெற்று வலு​வான அணி​யாக உரு​வெடுத்​துள்​ளது. இது​வரை 8 ஆட்​டங்​களில் விளை​யாடி​யுள்ள அந்த அணி 4 வெற்​றி, 4 தோல்வி​களு​டன் 8 புள்​ளி​களைப் பெற்று பட்​டியலில் 6-வது இடத்​தில் உள்​ளது.

கடைசி​யாக சிஎஸ்கே அணி​யுடன் விளை​யாடிய லீக் ஆட்​டத்​தில் முன்​னாள் கேப்​டன் ரோஹித் சர்மா அதிரடி​யாக விளை​யாடி 76 ரன்​கள் குவித்து ஃபார்​முக்​குத் திரும்​பி​யுள்​ளார். அதே​போல் ரியான் ரிக்​கெல்​டன், சூர்​யகு​மார் யாதவ், திலக் வர்மா ஆகியோ​ரும் அதிரடி காட்டி வரு​கின்​றனர்.

இவர்​கள் எதிரணி​யின் பந்​து​வீச்சை சிதறடிக்​கக் காத்​திருக்​கின்​றனர். மேலும் ஹர்​திக் பாண்​டி​யா, நமன்​திர், வில் ஜேக்ஸ் ஆகியோ​ரும் அணிக்கு பலம் சேர்க்​கின்​றனர்.

பவுலிங்​கில் அந்த அணி ஜஸ்​பிரீத் பும்​ரா, டிரென்ட் போல்ட், தீபக் சாஹர், வில் ஜேக்​ஸ், ஹர்​திக் பாண்​டி​யா, சான்ட்​னர் என பலம் மிகுந்து காணப்​படு​கிறது. மும்பை இந்​தி​யன்​ஸ் அணி​யின் பந்​து​வீச்சு குழு, நிச்​ச​யம் ஹைத​ரா​பாத் அணி​யின் பேட்​டிங் வரிசைக்கு மிகப்​பெரிய அழுத்​தத்​தைக்​ கொடுக்​கும்​ என்​ப​தில்​ சந்​தேகமில்லை.



Read More

Previous Post

’இந்து சமயத்தை இழிவு செய்துவிட்டார்! பொன்முடி மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?’ உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி!

Next Post

2057-க்குள் கரியமில சமநிலை: பரோடா வங்கி இலக்கு

Next Post
2057-க்குள் கரியமில சமநிலை: பரோடா வங்கி இலக்கு

2057-க்குள் கரியமில சமநிலை: பரோடா வங்கி இலக்கு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin