மும்பை இந்தியன்ஸ் அணி, ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் தோல்வியைத் தழுவும் விநோத சென்டிமென்ட் 11ஆவது ஆண்டாகவும் தொடர்கிறது.
ஐபிஎல் வரலாற்றில் 5 முறை கோப்பையை வென்ற மும்பை அணி, அதிக முறை சாம்பியன் பட்டத்தை வென்ற அணிகளில் ஒன்றாக திகழ்கிறது. அதேபோல சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் 5 முறை கோப்பையை வென்று முதலிடத்தில் உள்ளது. ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணி, ஐபிஎல் தொடரில் விளையாடும் முதல் போட்டியில் தோற்பதை கடந்த ஒரு தசாப்தமாகவே வாடிக்கையாக வைத்துள்ளது. 2013ஆம் ஆண்டு நடந்த தொடரின் முதல் போட்டியில் தோற்றிருந்த மும்பை, அன்று முதல் கடந்த 10 சீசன்களாக முதல் போட்டியில் தோற்றே வந்தது.
கேப்டன்ஷிப் மாறிய பிறகாவது இந்த சென்டிமென்ட் மாறுமா என எதிர்பார்த்த நிலையில் நடப்பு தொடரிலும், நேற்று நடந்த குஜராத் அணிக்கு எதிரான முதல் லீக் போட்டியில் மும்பை அணி தோற்றது.
முதலில் ஆடிய குஜராத் அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் 169 ரன்கள் என்ற எளிய இலக்கை கூட எட்டமுடியாமல் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ரன்கள் மட்டும் எடுத்து மும்பை அணி தோற்றது. இந்த தோல்வியின் காரணமாக, முதல் போட்டியில் தோற்கும், மும்பை அணியின் சோக வரலாறு தொடர்ந்து வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…
&w=750&resize=750,375&ssl=1)
