மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் கடந்த 36 நாட்களில் 82 குழந்தைகள் காணாமல் போயுள்ளனர் என காவல்துறை கவலை தெரிவித்துள்ளது.
மும்பை காவல்துறை அறிக்கையில், நவம்பர் 1 முதல் டிசம்பர் 6 வரையிலான 36 நாட்களில், குழந்தைகள் காணாமல் போனதாக 82 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்தக் காலகட்டத்தில் 18 வயதுக்குட்பட்ட 41 சிறுமிகளும் 13 சிறுவர்களும் காணாமல் போயுள்ளனர். ஐந்து முதல் 11 வயதுக்குட்பட்ட சிறுமிகளும் சிறுவர்களும் காணாமல் போனவர்களில் அடங்குவர்.
இந்தக் காலகட்டகாத்தில் பச்சிளம் குழந்தைகள் காணாமல் போன சம்பவங்களும் பதிவாகியுள்ளது.
குர்லா, வகோலா, பவாய், மால்வானி, சகினாகா போன்ற நகரின் பல்வேறு காவல் நிலையங்களில் குழந்தைகள் காணாமல் போனது தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும் ஜூன் முதல் டிசம்பர் வரை 6 மாத காலத்தில் மும்பையில் 93 சிறுமிகள் உட்பட 145 குழந்தைகள் காணாமல் போயுள்ளதாக, அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த காணாமல் போன சம்பவங்களுக்குப் பின்னால் மனித கடத்தல் இருப்பதாக காவல்துறை சந்தேகிக்கிறது.
இதற்கிடையே இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே ஆளும் பாஜக முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ்க்கு கடிதம் எழுதி உள்ளார்.
The post மும்பையை மிரட்டும் மனிதக் கடத்தல்?.. 36 நாட்களில் 82 குழந்தைகள் மாயம் – 6 மாதத்தில் 145 பேர்! appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

