Last Updated:
மும்பையில் 33 ஆண்டுகளுக்கு பின் பாஜக சார்பில் பெண் மேயர் Ritu Tawde தேர்வு, துணை மேயராக சிவ சேனாவின் Sanjay Kadi, BJP 44 ஆண்டுகளுக்கு பின் மாநகராட்சி வெற்றி.
மும்பையில் 33 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக பாஜக சார்பில் பெண் மேயர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மகராஷ்டிராவில் அண்மையில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் 44 ஆண்டுகளுக்கு பின்னர் மும்பை மாநகராட்சியை கைப்பற்றி பாஜக வரலாறு படைத்தது. இந்நிலையில், மும்பை மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கான தேர்வு நடைபெற்ற நிலையில், அதில் பாஜக சார்பில் ரித்து டாவ்டே மேயராக தேர்வு செய்யப்பட்டார்.
ஏறத்தாழ 33 ஆண்டுகளுக்கு பின்னர் பாஜக சார்பில் மும்பையில் பெண் மேயர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன் 1982 ஆண்டு பாஜக சார்பில் டாக்டர் பிரபாகர் பாய் மேயராக பதவி வகித்தார். துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவ சேனாவின் சஞ்சய் காடி துணை மேயராக தேர்வு செய்யப்பட்டார்.
முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்ரே தலைமயிலான சிவ சேனா சார்பில் வேட்பாளர்கள் யாரும் நிறுத்தப்படாதது பாஜகவுக்கு சாதகமாக அமைந்தது. மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ள ரித்து தாவ்டே (Ritu Tawde), கிழக்கு கட்கோபூரில் இருந்து இரண்டு முறை கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸில் இருந்து 2012ஆம் ஆண்டு விலகி பாஜகவில் இணைந்த ரித்து டாவ்டே, மும்பை மாநாகராட்சியில் கல்வி ஆணையத் தலைவர், மும்பையின் புறநகர் கட்டுமான கமிட்டித் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ளார்.
Mumbai,Maharashtra


