அரசின் பரிசுப் பொருட்களை சட்டவிரோதமாக விற்ற வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு விதிக்கப்பட்ட 14 ஆண்டுகள் சிறை தண்டனையை இஸ்லாமாபாத் நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
2018- ஆம் ஆண்டு முதல் 2022- ஆம் ஆண்டு வரை இம்ரான்கான் பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக இருந்தபோது வெளிநாட்டு தலைவர்கள், பிரமுகர்கள் அளித்த பரிசுப் பொருட்களை அரசிடம் ஒப்படைக்காமல் விற்று ஊழல் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது. இதுதொடர்பான வழக்கில் இம்ரான்கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீவிக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கில் இம்ரான்கான் மற்றும் அவரது மனைவிக்கு விதிக்கப்பட்ட 14 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைத்து இஸ்லாமாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரம்ஜான் விடுமுறைக்கு பின் விசாரணை நடத்தி முடிவெடுக்கும் வரை தண்டனை நிறுத்தி வைக்கப்படுவதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:
ஆம்ஆத்மி எம்பி சஞ்சய் சிங்கிற்கு ஜாமீன் – உச்சநீதிமன்றம் அதிரடி
எனினும் அவர்கள் விடுதலை செய்யப்படுவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. அதாவது அவர்கள் இருவருமே மற்றொரு ஊழல் வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். இதனால் மற்ற வழக்குகளிலும் விடுதலை செய்யப்படும்வரை அவர்கள் தொடர்ந்து சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். எனவே இது அவர்களுக்கு ஒரு தற்காலிகமான நிவாரணம் என அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதே போல பல வழக்குகளில் தண்டனை பெற்றுள்ள இம்ரான்கான் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் சிறையில் இருந்து வருகிறார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…
&w=750&resize=750,375&ssl=1)
