Last Updated:
ஜெகதீப் தன்கர் உடல் பரிசோதனைக்காக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்திய முன்னாள் துணைக் குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் துணைக் குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் (74), கடந்த ஆண்டு ஜூலை 21 அன்று உடல் நலப் பிரச்சனையை குறிப்பிட்டு தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா மற்றும் பணிவிடை விழா நடத்தாதது, சரியான விளக்கம் இல்லை என்று பல்வேறு விவகாரங்களை குறிப்பிட்டு எதிர்க்கட்சிகள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருந்தன.
இந்நிலையில், ஜெகதீப் தன்கர் இன்று தனது வழக்கமான உடல் பரிசோதனைக்காக எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் சென்றார். அப்போது அவருக்கு கடந்த 10ஆம் தேதி இரண்டு முறை லேசான மயக்கம் ஏற்பட்டதாக மருத்துவர்களிடம் தெரிவிக்கப்பட்டதாகவும், அதன் காரணமாக அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அவருக்கு எம்.ஆர்.ஐ. பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகளை மேற்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும், பரிசோதனைகள் முடிந்து அவர் டிஸ்சார்ஜ் செய்வது குறித்து நாளை முடிவு செய்யப்படும் எனவும் மருத்துவர்கள் கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


