Last Updated:
இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிராந்தி நிதி முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையின் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிராந்தி, தனது தொண்டு நிறுவன நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய ஊழல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை அதிபராக மகிந்த ராஜபக்ச பதவி வகித்த காலமான, 2006-ஆம் ஆண்டு, சிரிலிய சவியா (Siriliya Saviya) என்ற அறக்கட்டளையை, அவரது மனைவி ஷிராந்தி தொடங்கினார். கொழும்புவில் உள்ள குழந்தைகள் புற்றுநோய் மருத்துவமனைக்கு நவீன PET ஸ்கேன் கருவி வாங்குவதற்காக அந்த அறக்கட்டளை மூலம் அரசு வங்கிகள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டப்பட்டது. இவ்வாறு இலங்கை மதிப்பில் சுமார் 1 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
ශිරන්ති රාජපක්ෂ අත්අඩංගුවට ගත් අවස්ථාවේ දර්ශන https://t.co/8Np3bdKql1
— BBC News Sinhala (@bbcsinhala) October 7, 2026
ஆனால், அந்த நிதியில் பெட் ஸ்கேன் கருவி வாங்காமல், சீன அரசு இலங்கை அரசுக்கு நன்கொடையாக வழங்கிய ஸ்கேன் கருவிகளை அறக்கட்டளை சார்பில் கொடுத்ததாகவும், அதன் பின்னர், ஒரு கோடி ரூபாய் அறக்கட்டளை நிதியை தனது சொந்த கணக்கிற்கு ஷிராந்தி ராஜபக்ச மாற்றியதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக கொழும்புவில் உள்ள இல்லத்தில் வைத்து ஷிராந்தியிடம் விசாரணை நடத்திய இலங்கை ஊழல் தடுப்பு துறையினர், அவரை கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.
இலங்கை அதிபராக அநுர குமார திசாநாயக்க பதவியேற்ற பிறகு ராஜபக்ச குடும்பத்தினரின் ஆட்சியில் நடந்த முறைகேடுகள் குறித்த விசாரணையை தீவிரப்படுத்தினார். மகிந்த ராஜபக்சவின் மகன் நமல் ராஜபக்ச கடந்த மாதம் 4-ஆம் தேதி ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிராந்தியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

