முன்னாள் வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவின் முன் நாளை(02) காலை 9.30 மணிக்கு ஆஜராகுமாறு அழைக்கப்பட்டுள்ளார்.
அதன்படி, முன்னாள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன, நாளை காலை அங்கு ஆஜராவதாகத் தெரிவித்துள்ளார்.
நிதி மாற்ற முறைகேடு
அரச நிறுவனப் பதிவாளர் நிதியிலிருந்து ரூ. 90 மில்லியனை மற்றொரு அரச நிறுவனத்தில் முதலீடு செய்து 59.5 சதவீதப் பலன்களைப் பெற்றது தொடர்பான புகார் குறித்த விசாரணைக்காக குணவர்தன அழைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக 2007-ஆம் ஆண்டில் குணவர்தன சமர்ப்பித்த அமைச்சரவைக் குறிப்பாணை குறித்து அவரிடம் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

