கோலாலம்பூர்:
பிரதமர் துறையின் (கூட்டரசு பிரதேசங்கள்) முன்னாள் அமைச்சரான டத்தோஸ்ரீ டாக்டர் ஜாலிஹா முஸ்தபாவின் தாயார் ஹலிமா யாக்கோப் (77), நேற்று சனிக்கிழமை இரவு புத்ராஜெயாவில் காலமானார்.
சனிக்கிழமை இரவு 8:23 மணியளவில் புத்ராஜெயாவில் உள்ள டாக்டர் ஜாலிஹாவின் இல்லத்தில் காலமானார்.
அன்னாரின் இறுதிச் சடங்குகள் மற்றும் தொழுகை புத்ராஜெயா, பிரசிண்ட் 18-இல் உள்ள மஸ்ஜித் மஹ்மூதியாவில் (Masjid Mahmoodiah) நடைபெறும் என்றும், பின்னர், ஜோகூர் மாநிலத்தின் குலாய் (Kulai) நகரில் அன்னாரின் உடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இந்நிலையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் மற்றும் அவரது மனைவி டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிஸா வான் இஸ்மாயில் ஆகியோர் தங்களின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.




