சண்டிகர்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் மாநிலம் முலான்பூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள மகாராஜா யாதவீந்திர சிங் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்றுவரும் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷிகர் தவான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ய அதன்படி டெல்லி முதலில் பேட்டிங் செய்தது.
மிட்செல் மார்ஷ் மற்றும் டேவிட் வார்னர் ஓப்பனிங் செய்தனர். 3.2 ஓவர்கள் வரையே இக்கூட்டணி நீடித்தது. 12 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து மிட்செல் மார்ஷ் அவுட் ஆனார். அடுத்த மூன்று ஓவர்களில் 29 ரன்கள் எடுத்திருந்த வார்னரும் விக்கெட்டை பறிகொடுத்தார்.
சற்று நிம்மதி அளித்த சாய் ஹோப்பும் 33 ரன்களில் நடையைக்கட்டினார். 14 மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் கிரிக்கெட் விளையாட வந்துள்ள ரிஷப் பந்த், எதிர்ப்பார்ப்பை ஏமாற்றும் வகையில் 18 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதன்பின் வந்தவர்களில் அக்சர் படேல் 21, அபிஷேக் போரல் ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால், 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு டெல்லி அணி 174 ரன்கள் எடுத்துள்ளது.
பஞ்சாப் தரப்பில் அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்ஷல் படேல் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினர்.