தென்மேற்கு பருவமழை அந்தமான் கடல் பகுதியில் தொடங்கியதாகவும் வழக்கத்தை விட 3 நாட்களுக்கு முன்னதாக தொடங்கியுள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அதிக மழை கொடுப்பது வடகிழக்கு பருவமழை என்றாலும், நாடுமுழுவதும் பெரும்பாலான மாநிலங்களுக்கு மழை கொடுப்பது தென்மேற்கு பருவ மழைதான். இந்த தென்மேற்கு பருவ மழை பொதுவாக ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னதாகவே தென்மேற்கு பருவ மழை தொடங்கிவிட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்மேற்கு பருவமழை ஆண்டு தோறும் மே மாதம் 22 ஆம் தேதி தெற்கு அந்தமான் கடலோர பகுதிகளில் தொடங்குவதும், தமிழ்நாடு மற்றும் கேரளாவில் ஜூன் ஒன்றாம் தேதி வாக்கில் தொடங்குவதும் இயல்பானது. இந்த நிலையில், இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை 3 நாட்கள் முன்கூட்டியே இன்றைய தினம் தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக தென்மேற்கு பருவமழை மாலத்தீவு, குமரி கடல் மற்றும் தெற்கு வங்க கடல், நிக்கோபார் தீவுகள் மற்றும் தெற்கு அந்தமான் கடலின் சில பகுதிகளில் தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும், இந்தியாவில் மே மாதம் 31 ஆம் தேதி தென்மேற்குப் பருவ மழை தொடங்க வாய்ப்புள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும் என வானிலை மையம் கணித்துள்ளது.
.
&w=750&resize=750,375&ssl=1)
