லண்டனிலுள்ள கிங்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் எனும் துறையில் முதுமாணிக் கற்கையை பூர்த்தி செய்து முதலாவது முஸ்லிம் பெண் இயந்திர பொறியியலாளர் எனும் பெருமையை இலங்கை பெண் ஒருவர் பெற்றுள்ளார்.
திருகோணமலையின் மூதூரைச் சேர்ந்த ஸதீபா முஸ்னா முகம்மட் முனாஸ் என்ற பெண்ணே நாட்டிற்கு பெருமையை தேடித்தந்துள்ளார்.
இயந்திர பொறியியல் துறை
29 வயதான இவர், கொழும்பு பாத்திமா மகளிர் கல்லூரி, மூதூர் அல்ஹிதாயா மகா வித்தியாலயம், மூதூர் அந்-நஹார் மகளிர் மகா வித்தியாலயம், திருகோணமலை புனித மரியாள் கல்லூரியில் கல்வி கற்று, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இயந்திர பொறியியல் துறையில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்தார்.
இதன் பின்னர் லண்டனிலுள்ள கிங்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் Advanced Product Design Engineering and Manufacturing முதுமாணிக் கற்கையில் இவர் சிறப்பு சித்தி பெற்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |