Last Updated:
நேற்றைய இந்தியா – பாகிஸ்தான் மேட்ச்சின்போது முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 171 ரன்கள் எடுத்தது.
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் அபிஷேக் சர்மா மற்றும் புதிய ரெக்கார்டை ஏற்படுத்தியுள்ளனர்.
ஆசியாவை சேர்ந்த 8 நாடுகளின் அணிகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 9-ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் லீக் சுற்று முடிவுகளின் அடிப்படையில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் இலங்கை ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றன. தற்போது சூப்பர் 4 சுற்று நடைபெற்று வருகிறது. மொத்தம் 6 போட்டிகள் கொண்டதாக இந்த சுற்று நடைபெறுகிறது.
இதில் முதல் போட்டியில் இலங்கை அணியை வங்கதேசம் வென்றது. அதை தொடர்ந்து நடந்த இரண்டாவது சூப்பர் 4 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்னும் 4 போட்டிகள் மீதம் உள்ளன. இந்நிலையில் நாளை நடைபெற உள்ள போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன.
நேற்றைய இந்தியா – பாகிஸ்தான் மேட்ச்சின்போது முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 171 ரன்கள் எடுத்தது. 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்திருந்தபோது வெற்றி இலக்கை எட்டியது.
இந்திய அணியின் சேஸிங்கின்போது தொடக்க வீரர்களாக களம் இறங்கிய சுப்மன் கில் – அபிஷேக் சர்மா முதல் விக்கெட்டிற்கு 105 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பாகிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டிகளில் தொடக்க வீரர்கள் ஏற்படுத்திய அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாக இந்த ஸ்கோர் அமைந்தது.
முன்னதாக கவுதம் காம்பீர் மற்றும் ரஹானே இணை 77 ரன்கள் எடுத்திருந்ததே அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாக இருந்து வந்த நிலையில், புதிய ரிக்கார்டை சுப்மன் கில்லும், அபிஷேக் சர்மாவும் ஏற்படுத்தியுள்ளனர்.
September 22, 2025 8:21 PM IST


