Last Updated:
அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வேன்ஸ் இந்தியா வந்தார். பிரதமர் மோடி அவரை வரவேற்றார். வேன்ஸ் தனது குடும்பத்துடன் அக்ஷர்தாம் கோயிலுக்கு சென்றார். இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேசினர்.
இந்தியா வந்துள்ள அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வேன்ஸ்க்கு, பிரதமர் மோடி தனது இல்லத்தில் வரவேற்பு அளித்தார்.
அமெரிக்க துணை அதிபராகப் பதவியேற்ற பின் முதல்முறையாக ஜே.டி வேன்ஸ், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தனது மனைவி உஷா மற்றும் குழந்தைகளுடன் மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். இந்தியா வந்துள்ள துணை அதிபர் ஜே.டி வேன்ஸ், தனது குடும்பத்துடன் டெல்லியில் உள்ள அக்ஷர்தாம் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
இதையடுத்து மாலையில் அவர் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது வேன்ஸின் மகன்களில் ஒருவரை தனது மடியில் வைத்து பிரதமர் கொஞ்சினார். மேலும் அவர்களுக்கு மயில் இறகுகளையும் பரிசளித்தார். மேலும், இந்தச் சந்திப்பின்போது, இந்தியா-அமெரிக்க இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை குறித்தும் பாராட்டியுள்ளார்.
3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள ஜே.டி.வேன்ஸ் ஜெய்ப்பூர், ஆக்ரா உள்ளிட்ட இடங்களுக்குச் செல்கிறார்.
April 21, 2025 9:38 PM IST


