முதல் மாவீரர் தியாகி பொன் சிவகுமாரனின் 52 ஆவது ஆண்டு நினைவு நாள் வவுனியாவில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
வவுனியா, குருமண்காடு பகுதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் வட்டுக்கோட்டை 50 எழுச்சி மாநாட்டுக் குழுவின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
வட்டுக்கோட்டை 50 எழுச்சி மாநாட்டின் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் (05.06.2026) வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது.
ஒருங்கிணைப்புக் குழு
இதன்போது வவுனியா மாவட்டத்தில் எழுச்சி மாநாட்டை முன்னிட்டுச் செயற்படுத்தப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன் முதல் மாவீரன் தியாகி பொன் சிவகுமாரனின் திருவுருவப்படத்திற்குத் தீபம் ஏற்றியும் மாலை அணிவித்தும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் வட்டுக்கோட்டை 50 எழுச்சி மாநாட்டுக் குழுவினரும், வவுனியா மாவட்ட மாநாட்டு ஒருங்கிணைப்புக் குழுவினரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

