ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியிலேயே சென்னை அணி விளையாடுகிறது. இன்று வெளியிடப்பட்ட முதல் கட்ட ஐபிஎல் போட்டி அட்டவணையின்படி சென்னை அணி முதல் கட்டமாக 4 போட்டிகளில் மோதும்.
ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடர் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கும் என்று அதிகாரப்பூர்வாக இன்று மாலை அறவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலை கவனத்தில் கொண்டு முதல் 21 போட்டிகளுக்கான அட்டவணை மட்டும் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
மார்ச் 22 ஆம் தேதி தொடங்கும் முதல் போட்டி சென்னையில் மாலை 6.30-க்கு நடைபெறுகிறது. இந்த மேட்ச்சில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
சென்னை அணி விளையாடும் 4 போட்டிகள்-
-
மார்ச் 22 சென்னையில் நடைபெறும் போட்டியில் பெங்களூருவுடனும்,
-
மார்ச் 26 சென்னையில் நடைபெறும் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியுடனும்,
-
மார்ச் 31 விசாகப்பட்டினத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியுடனும்,
-
ஏப்ரல் 5 ஐதரபாத்தில் சன்ரைசர்ஸ் அணியுடனும், சென்னை அணி மோதுகிறது.
இந்த போட்டிகள் அனைத்து மாலை 6.30 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றனர். மொபைலில் ஜியோ சினிமா ஆப் மற்றும் jiocinema.com இணைய தளத்தில் போட்டிகளை இலவசமாக பார்க்கலாம்.
கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் 74 போட்டிகள் நடத்தப்பட உள்ளன. ஆனால் கடந்த ஆண்டு 60 நாட்களாக போட்டி நடைபெற்றது. இந்த ஆண்டு போட்டிகள் 67 நாட்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று வெளியிடப்பட்ட ஐபிஎல் முதல் கட்ட அட்டவணை-
முன்னதாக 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற்ற போது ஐபிஎல் போட்டி அதிக நாட்கள் நடத்தப்பட்டது. மார்ச் 22ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ள போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எதிர்கொள்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…
&w=750&resize=750,375&ssl=1)
