சென்னை,நடிகர் விக்ரம் பிரபு தற்போது ‘செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ’ சார்பில், தயாரிப்பாளர் லலித் குமார் தயாரிக்கும் சிறை படத்தில் நடித்துள்ளார். இதில், எல்.கே.அக்ஷய் குமார் மற்றும் அனந்தா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வெற்றிமாறனின் உதவியாளர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கி உள்ளார்.
இத்திரைப்படம் வரும் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், சிறை திரைப்படத்தின் முன்னோட்ட விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் பா.ரஞ்சித் பல விஷயங்களை பகிர்ந்துகொண்டார். அவர் பேசுகையில்,
“நம்மள பிடிக்குதோ, இல்லையோ.. பிரச்சினையை பேசித்தான் ஆகணும். அந்தப் பிரச்சினை சமூகநலம் சார்ந்த பிரச்சினையாக இருக்க வேண்டும். இல்லனா என்னை முதல் படத்திலேயே அனுப்பி இருப்பாங்க..” என்றார்.




