சிங்கப்பூர்: பொறியாளர் ஒருவர் வேலையிடத்தில் இரு வெளிநாட்டு ஊழியர்களை நோக்கி சத்தம் போட்டு திட்டும் காணொளி இணையத்தில் தீயாக பரவியது.
இந்நிலையில், நிலப் போக்குவரத்து ஆணைய (LTA) பொறியாளரான அவருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக LTA கூறியுள்ளது.
“அவன் இல்ல அவன் இல்ல”… தோ பாயோவில் கும்பல் மோதல்: 3 ஆடவர்கள் கைது – மற்றவர்களை தேடும் போலீஸ்
LTA வெளியிட்ட அறிக்கையில், அதன் பொறியாளர் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் சம்பந்தப்பட்ட இந்த சம்பவம் குறித்து அறிந்திருப்பதாக அது சொன்னது.
முதலில் பேஸ்புக்கில் பதிவேற்றப்பட்ட காணொளியில் LTA பொறியாளர், இரண்டு வெளிநாட்டு ஊழியர்களை நோக்கி திட்டுவதைக் காண முடிந்தது.
VIDEO: https://www.instagram.com/p/DNxP-vE3nfM/
“ஏன் சீட் பெல்ட் அணியவில்லை … “முதல் நாளா? உங்கள் ஓட்டுநர் உரிமம் எங்கே?” என்றெல்லாம் பொறியாளர் சத்தம் போட்டார்.
மேலும், “ஓட்டுநர் பயிற்சி பள்ளியிலிருந்து என்ன கற்றுக்கொண்டாய்” என்றும் அவர் ஊழியர்களிடம் கேட்பதும் காணொளியில் பதிவாகியுள்ளது.
ஊழியர்கள் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக நின்றனர். அதோடு விடாத பொறியாளர், ஓட்டுநர் உரிம அட்டையை வைத்து ஊழியர்கள் ஒருவரின் தலைக்கவசத்தில் ஓங்கி அடிப்பதையும் காணமுடிகிறது.
பின்னர் அவர் உரிம அட்டையை தரையில் வீசி எறிந்து அவர்களை நோக்கி மேலும் தொடர்ந்து கத்தினார்.
சிங்கப்பூரில் வேலை தேடுவோருக்கு உதவும் வலைத்தளம் – Singapore jobs website
LTA ஃபேஸ்புக்கில் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது; வேலையிடத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடுகளை பொறியாளர் எடுத்துக்கூறியதாக அது விளக்கியது.
இருப்பினும், பொறியாளர் சொன்ன விதம் ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதையும் LTA ஒப்புக்கொண்டது.
அதை சரி என ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையும் LTA விளக்கியது.
பொறியாளருக்கு ஆலோசனை வழங்கப்பட்டதாகவும், ஊழியர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்தும் நினைவூட்டப்பட்டுள்ளதாகவும் அது கூறியது.
மேலும் அவர் தனது செயல்களுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார் என்றும், மேலும் சம்பந்தப்பட்ட ஊழியர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் என்றும் LTA அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
சக ஊழியரிடம் அத்துமீறிய ஊழியர் – 26 மாத சிறை, 6 பிரம்படி விதிப்பு

