• Login
Tuesday, March 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி | IND vs ENG | ENG vs IND, 1st Test Day 5 Highlights

GenevaTimes by GenevaTimes
June 24, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி | IND vs ENG | ENG vs IND, 1st Test Day 5 Highlights
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


லீட்ஸ்: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பென் டக்​கெட் விளாசிய சதத்​தின் உதவி​யுடன் இங்​கிலாந்து அணி வெற்றி பெற்றது.

லீட்ஸ் நகரில் உள்ள ஹெட்​டிங்லி மைதானத்​தில் நடை​பெற்ற இந்த டெஸ்ட் போட்​டி​யில் முதல் இன்​னிங்​ஸில் இந்​திய அணி 471 ரன்​களும், இங்​கிலாந்து 465 ரன்​களும் குவித்​தன. 6 ரன்​கள் முன்​னிலை​யுடன் 2-வது இன்​னிங்ஸை விளை​யாடிய இந்​திய அணி 4-வது நாள் ஆட்​டத்​தில் 96 ஓவர்​களில் 364 ரன்​கள் சேர்த்து ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக கே.எல்​.​ ராகுல் 137, ரிஷப் பந்த் 118 ரன்​கள் சேர்த்​தனர்.

371 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த இங்​கிலாந்து அணி 4-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 6 ஓவர்​களில் விக்​கெட் இழப்​பின்றி 21 ரன்​கள் சேர்த்​தது. பென் டக்​கெட் 9, ஸாக் கிராவ்லி 12 ரன்​களு​டன் களத்​தில் இருந்​தனர். கைவசம் 10 விக்​கெட்​கள் முழு​மை​யாக இருந்த நிலை​யில் வெற்​றிக்கு மேற்​கொண்டு 350 ரன்​கள் தேவை என்ற நிலை​யில் இங்​கிலாந்து அணி நேற்று கடைசி நாள் ஆட்​டத்தை தொடர்ந்து விளை​யாடியது.

ஸாக் கிராவ்​லி​யும், பென் டக்​கெட்​டும் எந்​த​வித அழுத்​த​மும் இல்​லாமல் சீராக ரன்​கள் சேர்த்​தனர். மட்​டையை சுழற்​றிய பென் டக்​கெட் 121 பந்​துகளில், 14 பவுண்​டரி​களு​டன் சதம் விளாசி​னார். சர்​வ​தேச டெஸ்ட் கிரிக்​கெட்​டில் இது அவரது 6-வது சதமாக அமைந்​தது. மறு​முனை​யில் நிதான​மாக விளை​யாடிய ஸாக் கிராவ்லி 111 பந்​துகளில் தனது 17-வது அரை சதத்தை கடந்​தார். இங்​கிலாந்து அணி 40.5 ஓவர்​களில் விக்​கெட் இழப்​பின்றி 181 ரன்​கள் எடுத்​திருந்த போது மழை காரண​மாக ஆட்​டம் சிறிது நேரம் தடைபட்​டது.

22 நிமிடங்களுக்கு பிறகு மழை நின்ற பின்​னர் ஆட்​டம் தொடங்​கப்​பட்ட நிலை​யில் ஸாக் கிராவ்லி 126 பந்​துகளில், 7 பவுண்​டரி​களு​டன் 65 ரன்​கள் எடுத்த நிலை​யில் பிரசித் கிருஷ்ணா பந்​தில் முதல் சிலிப் திசை​யில் நின்ற கே.எல்​.​ராகுலிடம் பிடி​கொடுத்து வெளி​யேறி​னார். முதல் விக்​கெட்​டுக்கு ஸாக் கிராவ்​லி, பென் டக்​கெட் ஜோடி 42.2 ஓவர்​களில் 188 ரன்​கள் குவித்​தது. இதையடுத்து களமிறங்​கிய ஆலி போப் 8 பந்​துகளில், 2 பவுண்​டரி​களு​டன் 8 ரன்​கள் சேர்த்த நிலை​யில் பிரசித் கிருஷ்ணா பந்​தில் போல்​டா​னார்.

இதைத் தொடர்ந்து ஜோ ரூட் களமிறங்​கி​னார். 54 ஓவர்​களில் இங்​கிலாந்து அணி 2 விக்​கெட்​கள் இழப்​புக்கு 253 ரன்​கள் சேர்த்து வெற்​றியை நோக்கி பயணிக்க தொடங்​கியது. அந்த சூழ்​நிலை​யில் குறைந்​தது 42 ஓவர்​கள் மீதம் இருந்​தது. இங்​கிலாந்து அணி​யின் வெற்​றிக்கு மேற்​கொண்டு 118 ரன்​கள் தேவை​யாக இருந்​தது. ஷர்​துல் தாக்​குர் வீசிய அடுத்த ஓவரில் அடுத்​தடுத்து 2 விக்​கெட்​களை வீழ்த்தி இங்​கிலாந்து அணிக்கு அழுத்​தம் கொடுத்​தார்.

அபார​மாக விளை​யாடி வந்த பென் டக்​கெட் 170 பந்​துகளில், 21 பவுண்​டரி​கள், ஒரு சிக்​ஸருடன் 149 ரன்​கள் எடுத்த நிலை​யில் ஷர்​துல் தாக்​குர் வீசிய பந்தை கவர் திசை​யில் அடித்த போது பதிலி வீர​ரான நித்​திஷ் குமார் ரெட்​டி​யிடம் கேட்ச் ஆனது. இதையடுத்து களமிறங்​கிய ஹாரி புரூக் லெக் திசை​யில் வீசிய பந்தை ஸ்டெம்​புக்கு பின்​புறம் தட்​டி​விட முயன்​றார். ஆனால் ரிஷப் பந்த் அற்​புத​மாக கேட்ச் செய்​தார்.

இதன் பின்​னர் கேப்​டன் பென் ஸ்டோக்ஸ் களமிறங்​கி​னார். இங்​கிலாந்து அணி 58.3 ஓவர்​களில் 4 விக்​கெட்​கள் இழப்​புக்கு 269 ரன்​கள் எடுத்​திருந்த நிலை​யில் மீண்​டும் மழை குறுக்​கிட்​டது. அப்​போது இங்​கிலாந்து அணி​யின் வெற்​றிக்கு 102 ரன்​கள் தேவை​யாக இருந்​தது. குறைந்​தது 37.3 ஓவர்​கள்​ மீதம்​ இருந்​தன. 30 நிமிடங்​களுக்கு பின்​னர் ஆட்​டம் மீண்​டும் தொடங்​கப்​பட்​டது. பிறகு 51 பந்துகளில் 33 ரன்கள் எடுத்த நிலையில், ஷுப்மன் கில்லிடம் கேட்ச் கொடுத்து பென் ஸ்டோக்ஸ் வெளியேறினார். அடுத்து இறங்கிய ஜேமி ஸ்மித் 44 ரன்கள் எடுத்தார். இப்படியாக 82 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.



Read More

Previous Post

ஓரணியில் தமிழ்நாடு.. ஜூலை 1 முதல் திமுக சார்பில் உறுப்பினர் சேர்க்கை! ஆர்.எஸ். பாரதி, தங்கம் தென்னரசு கூட்டாக பேட்டி

Next Post

‘ஈரான் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும்’ – இஸ்ரேலுக்கு ட்ரம்ப் அறிவுறுத்தல் | Dont bomb Iran Trump instructs Israel

Next Post
‘ஈரான் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும்’ – இஸ்ரேலுக்கு ட்ரம்ப் அறிவுறுத்தல் | Dont bomb Iran Trump instructs Israel

‘ஈரான் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும்’ - இஸ்ரேலுக்கு ட்ரம்ப் அறிவுறுத்தல் | Dont bomb Iran Trump instructs Israel

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin