Last Updated:
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்ற உற்சாகத்துடன் இந்த மேட்சில் தென் ஆப்பிரிக்க வீரர்கள் விளையாடி வருகின்றனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விளையாடும் வீரர், தான் அறிமுகமான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலேயே உலக சாதனையை ஏற்படுத்தியுள்ளார். அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை அணி மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி கடைசி இடமான 10-ஆவது இடத்தை பிடித்தது. இருப்பினும் இந்த தொடரில் சில இடம் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். அவர்கள் அடுத்த சீசனின் ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு வலிமை சேர்ப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவர்களில் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த இளம் வீரர் டெவல்டு புரூவிசும் ஒருவர். தற்போது தென் ஆப்பிரிக்கா அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஜிம்பாப்வேக்கு எதிரான தொடரில் களம் இறக்கப்பட்டுள்ளார்.
ஜிம்பாப்வேயின் புலவாயோ நகரில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 19 வயதான டெவால்ட் ப்ரூவிஸ் அறிமுகமாகியுள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்ற உற்சாகத்துடன் இந்த மேட்சில் தென் ஆப்பிரிக்க வீரர்கள் விளையாடி வருகின்றனர். இந்த போட்டியில் ப்ரூவிஸ் 4 சிக்ஸர்களும் 3 பவுண்டரிகளும் அடங்கும். 38 பந்துகளில் 50 ரன்கள் விளாசினார்.
June 30, 2025 11:49 AM IST