Last Updated:
இரண்டு அணிகளும் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இதுவரை 120 முறை நேருக்கு நேர் மோதிய நிலையில், 62 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா-நியூசிலாந்து இடையிலான முதல் ஒரு நாள் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, 3 ஒரு நாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.
இதில், இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் இன்று தொடங்குகிறது. காயத்தில் இருந்து மீண்ட ஷூப்மன் கில் மற்றும் ஸ்ரேயஸ் ஐயர் இந்திய அணிக்கு பக்கபலமாக பார்க்கப்படுகிறது. மேலும், ஜடேஜா, சிராஜ், ஹர்ஷித் ராணா, அர்ஷ்திப் சிங் உள்ளிட்டோர் பந்து வீச்சிலும் நல்ல ஃபார்மில் உள்ளனர்.
மறுபுறம் மைக்கேல் பிரேஸ்வேல் தலைமையிலான நியூசிலாந்து அணியில் ஜேக்கப் டஃபி, ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன், வில்லியம் ஓ ரூர்க் உள்ளிட்டோர் ஆட்டத்தில் இருந்து விலகி இருப்பது பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இரண்டு அணிகளும் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இதுவரை 120 முறை நேருக்கு நேர் மோதிய நிலையில், 62 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
Jan 11, 2026 10:33 AM IST


