Last Updated:
இந்திய அணி தோல்வியை தவிர்க்க மிக கடுமையாக போராட வேண்டும் என்கிற நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் இன்னிங்சில் 669 ரன்கள் குவித்துள்ளது. இந்தியாவை விட இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 311 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இதனால் இந்திய அணி மீதான நெருக்கடி அதிகரித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், இங்கிலாந்து அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கடந்த 23ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று நான்காவது நாள் ஆட்டம் தொடர்ந்த நிலையில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணியின் கேப்டன் ஸ்டோக்ஸ் சதம் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
198 பந்துகள் எதிர்கொண்ட அவர் 141 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி 157.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 669 ரன்கள் குவித்துள்ளது. இங்கிலாந்து அணியில் ஜோ ரூட் 150 ரன்களும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 141 ரன்களும், பென் டக்கட் 94 ரன்கள், ஜாக் க்ராவ்லே 84 ரன்கள் எடுத்தனர்.
இந்திய அணியில் ரவீந்திரநாத் ஜடேஜா 4 விக்கெட்டுகளையும், பும்ரா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். முதல் இன்னிங்ஸில் 669 ரன்கள் குவித்ததன் மூலமாக இங்கிலாந்து அணி இந்தியாவை விடவும் 311 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
July 26, 2025 5:28 PM IST


