Last Updated:
துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமாருக்கு காலை உணவு விருந்தளித்தார் முதலமைச்சர் சித்தராமையா.
கர்நாடகாவில் துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமாருக்கு காலை உணவு விருந்தளித்த முதலமைச்சர் சித்தராமையா, தங்களுக்கிடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்தார்.
கர்நாடக முதலமைச்சர் பதவிக்காக சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமார் இடையே கருத்து வேறுபாடு நிலவி, இதுகுறித்து காங்கிரஸ் தலைமை ஆலோசனை நடத்த உள்ளது. இந்நிலையில், துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமாரை காலை உணவு விருந்துக்காக முதலமைச்சர் சித்தராமையா அழைப்பு விடுத்தார்.
அதன்படி, பெங்களூருவில் உள்ள சித்தராமையாவின் இல்லத்தில் இருவரும் இட்லி, சாம்பார், உப்மா ஆகியவற்றை சாப்பிட்டனர். தொடர்ந்து இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
ಉಪಮುಖ್ಯಮಂತ್ರಿಗಳಾದ ಡಿ.ಕೆ.ಶಿವಕುಮಾರ್ ಅವರ ಜೊತೆ ಬೆಳಗ್ಗಿನ ಉಪಹಾರ ಸೇವಿಸುತ್ತಾ, ಕೆಲಹೊತ್ತು ಮಾತುಕತೆ ನಡೆಸಿದೆ. @DKShivakumar pic.twitter.com/7ak3xFjatL
— Siddaramaiah (@siddaramaiah) November 29, 2025
அப்போது, எம்எல்ஏக்கள் சிலர் அமைச்சர் பதவி கேட்டு கட்சி தலைமையை அணுகியதாகவும் வேறு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் கூறினார். தொடர்ந்து பேசிய டி.கே.சிவக்குமார், கட்சிக்குள் எந்த பிரிவுகளும் இல்லை என்றார். 2028ஆம் ஆண்டும் கர்நாடகாவில் காங்கிரஸ் தான் வெற்றிப்பெறும் என சிவக்குமார் பேசினார்.
November 29, 2025 4:20 PM IST


